இவ்வாறு இணைய தளம் அமைக்க மிக எளிய அறிமுகம் தந்து வாசகர்களை அன்போடு அழைப்பவர்
குணசீலன் வீரப்பெருமாள். [author.guna@gmail.com]
இன்று இணைய உலகம் காற்று போல எங்கும் எதிலும் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கமாக மளிகை கடை அண்ணாச்சி முதல் மல்டி நேஷனல் கம்பெனியின் எக்சிகியூடிவ் வரை எல்லோரும் தனக்கென தனியே ஒரு இணையதளம் வைத்திருக்கிறார்கள். இணையதளம் என்றால் என்ன என்று விளக்கம் கொடுக்க தேவையில்லாத அளவிற்கு, இன்று இணைய உலகம் வளர்ந்துவிட்டது என்று, எனக்கும், உங்களுக்கும் நன்றாகவே தெரியும்.
இணையதளம் வைத்திருப்பது எல்லாம் அனாவசியம் என்பது போய் அத்தியாவசியம் என்றாகிவிட்ட நிலையில் இணையதள வடிவமைப்பு துறை ஏறுமுகத்தில் ராக்கெட் வேகத்தில் பறக்க தொடங்கியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் பலவற்றில் இணையதள வடிவமைப்பு நிறுவனங்கள் பல தொடங்கபட்டிருக்கின்றன. இதனால் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் பெருகியுள்ளன. சமீப காலங்களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சிக்கு சமுகவலைதளங்களை முக்கிய காரணங்களாக சொல்லாம். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக முதல் நாள் பேஸ்பூக்கில் பதிவேற்றிய படத்திற்கு எத்தனை பின்னுட்டங்கள், விருப்பங்கள் வந்துள்ளன என்பதை தான் பார்க்கிறோம். அதன் பின்னர்தான் மற்ற வேலைகள் எல்லாம்.
வோர்ட்பிரஸ்.காம் Vs வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி (org)
பெரும்பாலனவர்களுக்கு இந்த இரண்டு தளங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வோர்ட் பிரஸ்.காம், வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி இந்த இரண்டு தளங்களும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவைதான் என்றாலும், வசதிகளும், தன்மைகளும் கொஞ்சம் மாறுபடும்.
ஒரே வரியில் சொல்லப்போனால் வோர்ட் பிரஸ்.காம், ப்ளாக் (Blog) என்று சொல்லப்படுகின்ற இலவச வலைபூக்களை நிர்வகிக்க கூடியது. (கூகிள் பிளாக்கர் போன்றது). வோர்ட்பிரஸ்.ஓஆர்ஜி முழு இணையதளங்களை நிர்வகிக்ககூடியது.
வோர்ட் பிரஸ்.காம் முற்றிலும் இலவசம். இதன் மூலம் உருவாக்கப்பட்ட தளங்களை நிர்வகிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்யவேண்டாம். வோர்ட் பிரஸ் மென்பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்த தளத்தை அனைவரின் பார்வைக்கு கொண்டுவர ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயரை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவை எல்லாவற்றையும் வோர்ட் பிரஸ்.காம் பார்த்துக்கொள்ளும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்து உள்நுழைந்து கொண்டால் போதும். நேராக சென்று பதிவுகளை பிரசுரிக்கும் வேலைதான் உங்களுக்கு. குறிப்பிட்ட எண்ணிகையில் உள்ள வோர்ட்பிரஸ் வார்ப்புருக்களை உங்கள் ப்ளாக்கில் (Blog) நிறுவிக்கொள்ளலாம்.
வோர்ட்பிரஸ்.காம் மூலம் இயங்கும் தளங்களை ஆங்கிலத்தில் வோர்ட்பிரஸ் ஹோஸ்டட்டு வெப்சைட் என்று சொல்வார்கள். (Wordpress Hosted Website)
இப்படி வசதிகளை கேட்டவுடன் வோர்ட்பிரஸ்.காம்- லயே நாம் இணையதளம் ஆரம்பித்துவிடலாம் என்று நினைகிறீர்கள் தானே ? ஒரு நிமிடம் பொறுங்க.. இதையும் நான் சொல்லிவிடுகிறேன்.
முதலில் உங்கள் தளத்தின் பெயரை mywebsite.com என்று நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், வோர்ட்பிரஸ்.காமில் அது முடியாது. உங்கள் அனுமதி இல்லாமலயே Wordpress.com என்று உங்கள் டொமைன் பெயருக்கு பின் பகுதியில் தானாகவே சேர்ந்துகொள்ளும். உங்கள் தளத்திற்கு வருகை புரிய நினைக்கும் பார்வையாளர் ஒருவர் mywebsite.wordpress.com என்று இணைய உலவியில் தட்டச்சு செய்துதான் உங்கள் தளத்திற்கு வருகை தர முடியும்.
என்று விவரமான விளக்கம் தந்து நம்மையே தேர்ந்தெடுக்க குணசீலன் வாய்ப்பளிக்கிறார்.
இந்த நூலைப் பொறுமையாக ஒன்றுக்குப் பத்து முறை வாசித்து, கூடவே ஒரு மடிக்கணினி அல்லது மேஜைக்கணினி வைத்து ஸ்டெப் பை ஸ்டெப் பயிற்சி செய்து பார்ப்போர் நிச்சயம் ஒரு தனித் திறமையை எட்டுவர்.
வெறும் ரூ.100/- விலையில் இப்படி ஓர் அற்புதமான தொழில்நுணுக்கப் பயிற்சி
ஏட்டை வெறும் லாபம் நோக்கம் கருதாமல் தங்கள் தனித்த தொழில் நேர்த்தியுடன் வெளியிட்டிருப்போர்
நர்மதா பிரசுரம்
10, நாணா தெரு,
தி.நகர், சென்னை-600017
தொ.பே. எண் 24334397
No comments:
Post a Comment