Saturday, 25 June 2016

அலிபாபாவும் 40 திருடர்களும்

நமக்கு நன்றாகத் தெரிந்த அதே அலிபாபாவும் 40 திருடர்களும் கதை தான். ஓவியர் தமிழின்  அருமையான சித்திரங்களுடன் மிகவும் குறைந்த விலைக்கு தாரிணி பதிப்பகத்தார் இதை சிறப்புற வெளியிட்டுள்ளார்கள்.பக்கத்திற்குப் பக்கம் சிறுவர் முதல் பெரியவர் வரை அலுப்பு சலிப்பின்றிபடித்த கதை தானே என்று உதாசீனம் செய்வதற்கே  இடம் தராமல் கதையை சொல்லிச் செல்கிறார் ஜெயதாரிணி.
முகவரி.
Dharini Padhippagam,                                                                                    
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341

கணிதத்தைச் சமையல் செய்வது எப்படி?


கணிதத்தைச் சமையல் செய்வது எப்படி?
இப்படிக்கூடச் சொல்லலாம். கணித ரீதியாகச் சமையல் செய்வது எப்படி?சிகாகோ கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியருக்கு என்ன வேலை? ஓவியமும் சிற்பமும் வடிப்பவர்களுக்கும் கணக்கு வாத்தியாருக்கும் என்ன சம்பந்தம்? அதை விளக்கத்தான் யூஜினியா செங் வந்திருக்கிறார்.
திட்டவட்டமான உருவமற்ற கற்பனையான விஷயங்களை அருவமாக உணர்ந்து அப்பூதியாக புரிந்துகொண்டு எண்ணமாக உருவாக்குபவர்கள் “கலைஞர்கள்”. அதே போல் திட்டவட்டமாக வகுக்கமுடியாத விஷயங்களுக்கு ஒரு பகுப்பு கொடுத்து, அதை விளக்குபவர்கள் “கணிதயியலாளர்கள்”. லண்டனில் இருக்கும் புனித பால் தேவாலயத்தில் (செயிண்ட் பால் கதீட்ரல்) எவ்வாறு கணிதம் பங்களிக்கிறது என்பதையும் மாரத்தான் ஓட்டத்தில் கணக்கு எப்படி முக்கியம் என்பதையும், தக்காளியை ஏன் காய்கறியில் சேர்க்கிறோம் என்பதையும் πயை எப்படி உண்டாக்குவது – கணிதத்தின் கணிதம் குறித்து உணவு வழி ஆராய்ச்சி (How to Bake Pi: An Edible Exploration of the Mathematics of Mathematics) நூலில் அறிமுகம் செய்கிறார்

.
கணிதத்தைக் குறித்து இருக்கும் நம்பிக்கைகளை முதலில் பார்ப்போம்:
கணக்கு என்பது எண்களும் எண்கள் சார்ந்தவையும்
செல்பேசி என்பது நண்பருடன் பேசுவதற்கானது மட்டுமே என்று நம்புவதைப் போல், இந்த நம்பிக்கை முட்டாள்தனமானது. செல்பேசியில் மற்றவரை அழைக்கலாம்; உரையாடலாம். அதில் விளையாடவும் செய்யலாம். கூடவே, மின்னஞ்சல் அனுப்பலாம்; பாட்டு கேட்கலாம். அதே போல் கணிதம் என்பது எண்களை வைத்து கணக்குப் போடுவதற்கும் பயன்படும்; ஆனால், அது தவிர நூற்றுக்கணக்கான மற்ற விஷயங்களையும் கொண்டிருக்கிறது.
கணக்கு என்பது சரியான விடையைப் பெறுவது
விளையாட்டில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக விளையாடுகிறோம் என்பது சொல்வது போல் இது இருக்கிறது. ஆட்டம் ஆடும்போது வெல்லத்தான் எண்ணுகிறோம். ஆனால், வெற்றியை விட, நண்பர்களுடன் ஓடியாடி ஆடுவது முக்கியம். உடற்பயிற்சியை ஊக்கத்துடன் செயலாற்றுவது அதனினும் முக்கியம். அடுத்த முறை, அதே ஆட்டத்தை, இன்னொரு இடத்தில் ஆடும்போது — திறன்பட விளையாட, புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வது முக்கியம். எதைச் சரியாக செய்தோம், எங்கே இன்னும் நன்றாக ஆடலாம் என்று புரிந்து கொள்ளும் வழிமுறையை அறிவது இன்னும் முக்கியம். 
கணக்கு என்பது சரி அல்லது தப்பு என்பதைக் குறித்தது
துணியைத் தைப்பதற்குக் கொடுக்கிறோம். தையற்காரரும் அதைத் தைத்துக் கொடுக்கிறார். சில சமயம் சரியாக அமைவதில்லை. ஒழுங்காக இல்லை எனப்படும் ஆடை, சில சமயம் நாகரிகமாகிவிடும். பெல்பாட்டாம் என்னும் தொள தொளா கால்கள் கொண்ட காற்சட்டை, ஒரு காலத்தில் சரியானதாக இருந்தது. இப்பொழுது தவறாக இருக்கிறது. முட்டியில் கிழிந்த கால்சட்டைகள், ஒரு காலத்தில் நகைப்புக்கு உள்ளாகியது. இப்பொழுதோ, புத்தம்புதிய ஜீன்ஸ் வாங்கி, கால் முட்டியைக் கிழித்துக்கொள்வது சரியான விஷயமாகி இருக்கிறது. கணக்கிற்கே வருவோம். 10 + 4 = 2 என்று சொன்னால் தப்பு என்போம். ஆனால், அதே கணக்கை, கடிகாரத்தில் போட்டால், பத்து மணியோடு நான்கு மணி நேரத்தைக் கூட்டினால், மதியம் இரண்டு வருகிறதே!
’கூட்டிக் கழித்துப் பார்… கணக்கு சரியாக வரும்’ என்று அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தொழிலதிபர் இராதாரவி இதைத்தான் சொன்னாரா?
நீங்கள் கணிதவியலாளரா? அப்படியானால் புத்திசாலியாகத்தான் இருப்பீர்கள்!
இது எப்படி இருக்கிறது என்றால், கம்ப்யூட்டரில் வேலை செய்வோர் எல்லாம் அறிவாளியாக இருப்பார்கள் என்று எண்ணுவதைப் போலத்தான் இருக்கிறது. கணினியில் புழங்குவது எளிமையானது. அதே போல் கணிதத்தில் உழல்வதும் சுளுவானதுதான். நான் பள்ளியில் படித்தபோது எந்த விளையாட்டிலும் மிளிர்ந்தது கிடையாது. ஏனென்றால், விளையாட்டில் பங்குபெறுவோர் படிப்பில் பரிமளிக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. இரண்டாவது விதியாக, விளையாட்டில் பங்குபெற ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டிருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால், இது எல்லாமே கட்டுக்கதை. இப்பொழுது கூட நான் தினசரி ஐந்து கிலோமீட்டர் ஓடுகிறேன். உடல் பயிற்சியில் உற்சாகமாகப் பங்குபெறுகிறேன். ஆனால், அமெரிக்க கால்பந்து என்றால் காத தூரம் ஓடுகிறேன். அதாவது, திறன் வாய்ந்த உடல் பெறுவது என்பது விளையாட்டில் சாமர்த்தியசாலி என்பதோடு சம்பந்தப்பட்டது அல்ல. புத்திக்கூர்மை அதிகம் பெற்றவர்தான், கணிதத்தில் சிறந்து விளங்குவார் என்பதும் பொருத்தம் அல்ல.
கணிதத்தில் என்ன ஆராய்ச்சி வேண்டியிருக்கிறது! புதியதாக புத்தம்புதிய எண்ணைக் கண்டுபிடிக்க முடியுமா என்ன?
இந்தப் புத்தகம்தான் இந்தக் கேள்விக்கான விடை என்கிறார் யூஜினியா செங்.
உத்தியும் உத்தி சார்ந்த வழிகளும்
கணிதத்தைக் குறித்து விளக்க, இந்தப் புத்தகம் நெடுக சாப்பாட்டு விஷயங்களையும் கேக் வகையறாக்களையும் கையில் எடுத்திருக்கிறார் யூஜினியா செங். கடைக்குச் செல்கிறீர்கள். அங்கே புத்தம்புதிய மிக்ஸியைப் பார்க்கிறீர்கள். வாங்கியும் விட்டீர்கள். இப்பொழுது சட்டினி செய்து பார்க்கும் ஆவல் எழும். காலை எழுந்தவுடன் பழரசம் உண்பதற்கும் ஆசை பிறக்கும். வித விதமான துவையல் அரங்கேறும். சாதாரணமாகச் சப்பாத்தி செய்துவிட்டு, அதற்கு என்னத் தொட்டுக்கொள்ளலாம் என்று யோசிப்போம். ஆனால், மிக்ஸி கிடைத்தவுடன், அரைத்து விட்ட குழம்பு செய்துவிட்டு, சூப் போல் அதை உண்ண முடியுமா எனக் கூட யோசிப்போம்.
கணக்கும் இதே கதைதான். ஒரு உத்தியைக் கண்டுபிடிக்கிறோம். பிறகு, அதே உத்தியை வேறு எங்கெல்லாம் நுழைக்கலாம் என ஆராய்கிறோம்.
ஓவியங்களையே எடுத்துக் கொள்ளலாம். புள்ளிகளால் உருவாகும் ஓவியம் என்பார்கள்; சதுரமும் செவ்வகமும் கொண்டு உருவாகும் ஓவியம் என்பார்கள்; உணர்வுப்பதிவுவாதம் (இம்ப்ரெஷனிஸம்) என்பார்கள்; அதாவது, எந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறோமோ, அதைக் கொண்டு அந்த ஓவியத்தைச் சட்டகத்திற்குள் அடைக்கிறார்கள். என்ன வரைந்தார்கள், எதை உணர்த்துகிறார்கள், என்ன விஷயங்களை கோடிட்டுக் காட்டினார்கள் என்பதைக் கொண்டு அந்த ஓவியங்களை வகுக்கவில்லை.
தமிழ்ப்படங்களில் கூட இந்த வகுப்புமுறையை பார்க்கலாம். வடிவேலு வருகிறாரா… அப்படியானால் நகைச்சுவை காட்சி. சமந்தா வருகிறாரா… காதல் காட்சி. நாலைந்து அடியாள் காண்பிக்கப்படுகிறார்களா… அடிதடி சண்டைக் காட்சி. இந்த வட்டத்திற்குள்தான் சினிமா சுழல்கிறது. வில்லன் நடிகர்களுக்குள் காதல் மலர்வதில்லை.
இதற்குக் கணக்கில் தருக்கம் (லாஜிக்) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பரிசோதனைகளை நம்புவதை விட, கள ஆய்வுகளில் காலம் செலுத்துவதை விட, கண்மூடித்தனமான நம்பிக்கைகளை விட, சுதந்திரமான மக்களாட்சியிலோ, வன்முறையிலோ இறங்குவதை விட அறிவுப்பூர்வமான ஏரணங்களை நிலைநாட்டுவதில் கவனம் கொண்டிருப்பது கணக்கு. இந்த நூலில் மூன்று விஷயங்களை அந்தக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு விரிவாக ஆராய்கிறார்:
1. நுண்மமாக்கல் (abstraction) – எக்ஸ், ஒய் என்று எல்லாவற்றையும் சுருக்கி எண்ணமாக்கும் அல்ஜீப்ரா போன்ற கணக்கு
2. பொதுவாக்கல் (generalization) – உருண்டைக் குழம்பிற்கான உருண்டையும் மிக்ஸியில் இருந்து வரும்; குழம்பிற்கான விழுதும் மிக்ஸியில் இருந்து வரும். அதே போல், முக்கோணத்தில் இருந்து கூம்புகளும் வரும்; கோவில் கலசங்களும் தேவாலயங்களும் உண்டாகும்.
3. பகுப்பியல் கோட்பாடு (Category theory) – கணிதத்திற்கான கணிதம் என்கிறார். தருக்கத்தை நம்பி கணிதத்தின் பிழைப்பு ஓடுகிறது என்றால், அந்தக் கணக்கில் எந்த அடுக்குகள் முட்டுக்கொடுத்து கணிதத்தை நிலைநிறுத்துகின்றன என்று ஆராய்ந்து பகுத்தறியும் கலையின் படிப்பு.
தியாடோர் பாஸ்கரன் போல் பறவைகளின் மீது உங்களுக்குக் காதல் என்று வைத்துக் கொள்வோம். அதன் பழக்கவழக்கங்களை ஆராய்கிறீர்கள். என்ன சாப்பிடுகிறது, எப்பொழுது கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது, எப்படிக் கூடு கட்டுகிறது, எவ்வாறு இரை தேடுகிறது, எங்ஙனம் தன்னுடைய இடத்தைக் கண்டிப்பாக நிர்ணயித்து மற்ற ஜந்துக்களை அணுகாமல் அடைகாக்கிறது என்றெல்லாம் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், காகத்தில் இருந்து மயில் உண்டாக்க முடியாது. சிறிய பறவையில் இருந்து புத்தம்புதிய பெரிய பறவையை உருவாக்க இயலாது. இது ”பொதுவாக்கல்”.
அதே போல் ஒட்டகச்சிவிங்கியில் இருந்து வான்கோழியைப் படைக்க முடியாது. பறவையல்லாத ஜந்துவில் இருந்து மாயமந்திரம் செய்து பறவையைக் கொணர இயலவில்லை. இது ”நுண்மமாக்கல்”.
ஒன்று, இரண்டு, மூன்று என்றால் உங்களுக்குப் புரியும். அதே சமயம் ஆங்கிலேயருக்கு, ஒன், டூ, த்ரீ என்றால் மட்டுமே புரியும். இந்திக்காரருக்கோ, ஏக்,தோ, தீன் என்றால் விளங்கும். இதுவும் ஒருவகை ”நுண்மமாக்கல்”. இந்த மாதிரி சுவாரசியமான அன்றாட கணக்குகளையும் புரிதல்களையும் பளிச்சிட வைக்கிறார் யுஜினியா.
இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது கணிதவியலாலர்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று உணர்த்துவதில் இருக்கிறது. எந்தச் சூத்திரத்தை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்று நுணுக்கமாக விவரித்து கணிதப் புத்தகத்தில் மூழ்கடிக்காமல், கணித வழிமுறைகளை எண்ணுவதற்குப் பாதை காட்டி இருக்கிறார் யூஜினியா. இந்த மாதிரி கடினமான விஷயங்களை விளக்கும்போது, சாதாரணமாக நீர்த்துப்போகுமாறு விளக்குவதுதான் நிதர்சனம். நிறையப் புத்தகங்கள் விற்று, நியு யார்க்கர் போன்ற வணிக சஞ்சிகைகளில் இடம்பெறுவதற்கான சூத்திரமும் அதுவாகவே இருக்கிறது. ஏதாவதொரு சம்பவத்தை கதை போல் விளக்கி, அந்தப் புகழ்பெற்ற விஷயத்தை வைத்து, அறிவியலை எளிமையாக்கி பெஸ்ட்செல்லர் பட்டியலில் இடம்பிடிக்கலாம். இந்த மாதிரி போலி மாயாஜாலங்களில் யுஜினியா புகவில்லை. அவரோ கலைக்கல்லூரியில் கணிதம் பயிற்றுவிப்பவர். கேக் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொண்டே கேக் சாப்பிடுவது போல் கணிதத்தின் நுணுக்கங்களுக்குத் தூண்டில் போட்டு அழைக்கிறார்.
நன்றி:சொல்வனம் 

இலக்கில்லாத தேடல்

காம்யுவின் ’முதல் மனிதன்’ – இலக்கில்லாத தேடல்


முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் ‘முதல் மனிதன்’ என்ற நாவலை முப்பது ஆண்டுகள் மொழிபெயர்ப்பு பணி செய்யும் வே. ஸ்ரீராம் பிரெஞ்சு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பல பிரெஞ்சு நூல்களை தமிழ் மொழிபெயர்ப்பாக தொடர்ந்து கொடுத்துவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது.
                                                                              
க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன் 
காம்யுவின் ‘முதல் மனிதன்’ ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்கு தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எதுவும் இல்லை. அறிவாக தன்னை காட்டிக்கொண்ட ஏதோ ஒன்றின் துணையோடு நல்லது, கெட்டது, நியாய அநியாயம் போல் தோன்றியவற்றை தானே வகுத்துக்கொண்டான். தனக்கென்று தானே ஒரு மரபை உருவாக்கிக்கொண்டான். எங்கிருந்தோ அங்கே தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்த அந்த “பிரமாண்ட” நாட்டில் அவன்தான் முதல் மனிதன். 
                                                                    
காம்யு 
அவன் புலம்பெயர்ந்தவர்களோடு இருந்தான். “கடந்தகால வரலாறோ, ஒழுக்க நெறிமுறைகளோ, வழிகாட்டிகளோ, மத ஈடுபாடோ இல்லாமல், இருத்தலிலேயே மகிழ்ச்சியடைந்து இருளுக்கும் சாவுக்கும் பயந்தபடியே ...” இருந்த மனிதர்கள். இவர்கள் வாழ்க்கையை, சுதந்திரமான தேர்வு இருந்திருக்காத வாழ்க்கையை, வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டவர்கள். 
இலையுதிர்கால இரவு மழையில் ழாக் கோர்மெரியின் பிறப்போடு நாவல் துவங்குகிறது. இடையில் நாற்பது ஆண்டுகளை விடுத்து மீண்டும் வசந்தகாலத்தின் மதிய வேளையில் தனது விவரிப்பை தொடங்குகிறது. கால இடைவெளியை மீண்டும் மீண்டும் தாண்டிச் சென்று ழாக் கோர்மெரிக்குள் “ பீறிடும் வளமான குழந்தைப்பருவ நினைவுகளை” பிடித்துவந்து காட்டும் நாவலின் கட்டமைப்பு நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமான ஒரு ஊசலின் இயக்கம்.
ஏழ்மையும், இல்லாமையும் தரும் அவலத்தின் அத்தனை பரிமாணங்களையும் மிகையில்லாமல் காணலாம். அநாமதேயம், அடையாளமின்மை, மரபின்மை, வெறுமை—இவற்றின் மௌனத்தோடு சமர் புரியும் தீராத வாழ்க்கைப்பசி, அறிவின் கட்டுக்கடங்காத ஆர்வம், இந்த மோதலின் தீவிரம், அதில் பிறக்கும் தவிப்பு – இவற்றையும் மிகையின் விரசம் இல்லாமல் காணலாம். உணர்ச்சியின் வேகம் உண்மையான கலைப்படைப்பு விதிக்கும் வரம்புக்குள் நிற்பதும், அதை அப்படியே நிற்கவைக்கும் ஜாலமும்தானே இலக்கியம்! 
ழாக் கோர்மெரியின் குடும்பம் அல்சாஸ் பிரதேசத்திலிருந்து ஜெர்மானியர்களால் துரத்தப்பட்டு அல்ஜீரியாவில் குடியேறியது. அவனது தாயின் குடும்பம் ஸ்பெயினின் மகோன் தீவிலிருந்து அங்கே வந்தது. ழாக்கின் தந்தை தாய்நாட்டுக்காக போரில் உயிர்விட்டார். அவருக்கு அப்போது வயது இருபத்தொன்பது. அவரது கல்லறையைத் தேடி சென்ற ழாக் நாற்பது வயதை தாண்டியிருந்தான். தந்தையைவிட மகனுக்கு வயது அதிகம்! இது அவனை உலுக்கிவிட்டது. கால நதியின் ஓட்டத்தில் வருடங்கள் தத்தம் இடத்திலிருந்து நழுவி இயற்கையின் ஒழுங்குமுறை குலைந்துபோனதல்லவா?. நரைதட்டும் மனிதர்களின் “தந்தைகளாக இருந்த குழந்தைகள் தூவப்பட்ட இடம்” அந்த கல்லறைத்  தோட்டம். 
போரும், புலப்பெயர்வும், ஏழ்மைக்கும் இல்லாமையின் கொடுமைக்கும் பிறப்பிடம். அவன் தாய் செவிடு. பேச்சுத்திறன் இல்லை. மகிழ்ச்சியோ சுரத்தோ எப்போதுமே இருந்தது இல்லை. பாட்டி ஒன்பது குழந்தைகளை பெற்று வளர்த்தவள். இல்லாமையின் கொடுமையில் இரண்டு ஃப்ராங்குகளே அவளுக்கு கனிசமான தொகை. அவனைவிட பெரியவர்களுக்கு பொருந்தும் உடைகளைத்தான் பாட்டி அவனுக்கு வாங்கியிருப்பாள். தேவையின் கொடுமையில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் புண்படுத்திக் கொள்வார்கள். மாமா எர்னெஸ்ட் அவர் அண்ணனுடன் கோபாவேசத்தில் சண்டையிட்டாரல்லவா? கோடைகால விடுமுறையில் அவன் வேலைக்கு போகவேண்டியிருந்ததே! வேலையில் சேர்வதற்கு ஒரு பொய். பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு வேலையிலிருந்து விலக ஒரு பொய். தோழர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்ற போலி அவமான உணர்வு – இப்படியாக ஏழ்மையின் சாபக்கேட்டை ழாக் அனுபவிக்கிறான். முதல் சம்பளம் பெற்று வரும்போது வெகுளித்தனமும், குழந்தைத்தனமும் செத்துப்போய் அவனுக்குள் இருந்த சிறுவனும் இறந்துவிடுகிறான். “பெயரற்ற, வரலாறு அற்ற பிறவிகளை உருவாக்கிய ஏழ்மை என்ற புதிர்தான் அங்கு இருந்தது”. அங்கு எல்லாரும் ஆன்மா இல்லாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பள்ளித்தோழன் திதியேவுக்கு தாய்நாடு, தலைமுறைகள்வழி வந்த குடும்பம், எதிர்கால கனவுகள், நன்மை தீமையின் புரிதல், எல்லாமே இருந்தன. ழாக்கிற்கு கடந்த காலம் இல்லாத, எதிர்கால கற்பனை இல்லாத, நிகழ்காலத்திலேயே கழியும் வாழ்க்கை. 
பெயரற்ற நிலையிலிருந்தும், வரலாறு இல்லாத கூட்டத்திலிருந்தும் அவன் தப்பிக்க விரும்பினான். ஆனால் அவனுக்குள் இனம்புரியாத ஒன்று இருளையும் அநாமதேயத்தையும் தீவிரமாக விழைந்தது. எதிரெதிரான விழைவுகள் அவனுக்கே அவனை ஒரு புதிராக்குகிறது.
புதிர் எப்படி விடுபடுகிறது? நீண்டநாள் வாழவேண்டும் என்ற வெறித்தனமான வேட்கை. அது பெண்ணின் ஸ்பரிசத்தில் வரும் மூர்ச்சையைபோல தன்னை உணரச்செய்யும். “முழுமையாக சாவை எதிர்கொள்ளும் கலப்படமற்ற வேட்கை”. அன்றாட வாழ்க்கையில் காரண-காரிய நியாயங்களைக் கொடுத்த, கன்ணுக்கு புலனாகாத ஒரு சக்தி “ கிளர்ச்சி செய்யாமல் சாவதற்குமான நியாயத்தையும் அளிக்கும்”. இப்படி அவனுக்கு ஒரு “குருட்டு நம்பிக்கை”. 
‘முதல் மனிதன்’ தனக்காக தானே மேற்கொண்ட இலக்கில்லாத தேடலும் அதனை தொடர்ந்து வரும் தீவிர மனப் போராட்டமும்தான் நாவலின் ஊடுசரம். தேடலின் இலக்கில்லாமையும், அதனை அவனே மேற்கொள்ளவேண்டிய சூழலும்தான் அவனை முதல் மனிதனாக்குகிறது. 
காம்யுவின் நாவலை சுயசரிதை நாவல், சுயசரிதை விவரணை என்று சொல்வதுண்டு. இருத்தலியல் தத்துவத்திற்கு இது ஒரு கதைவடிவம் என்றும் சொல்லலாம். காம்யுவின் சொந்த வாழ்க்கை இந்த நாவலில் எவ்வளவு கலந்து இருக்கிறது என்று காண்பதேகூட விமர்சன நோக்கமாக இருந்திருக்கிறது. சுயசரிதமும், ஏதாவது ஒரு தத்துவமும் சம்பவங்களை கோர்க்கும் இழையாக இருப்பது நாவலின் மதிப்பை உயர்த்துவதாக கருதுவது இலக்கியத்தின் தன்மையை அறியாத பத்தாம்பசலித்தனம். ழாக் ( அவன் காம்யு வாகவே இருந்தாலும் கூட), அவனது தாய், பாட்டி, மாமா, அவனது ஆசிரியர் – இவர்களை கதாபாத்திரங்களாகவே ஏற்கவும், பார்க்கவும் வேண்டும். நாவலை ஒரு புனைவு இலக்கியமாகவே பார்க்கவேண்டும். நாவலில் சம்பவங்களுக்கு பஞசமிருப்பதாக கருத இடமில்லை. சம்பவங்கள் எல்லாம் பாத்திரங்களின் புறநிகழ்வு நடவடிக்கைகளாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. அவற்றைவிட சுவாரஸ்யமான, கணக்கிலடங்காத சம்பவங்கள் ழாக்கின் மனவெளியிலேயே நிகழ்கின்றன. 
காம்யுவின் மகள் காதரின் காம்யு நூலின் பிரஞ்சு மூலத்திற்கும், ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் எழுதிய முன்னுரைகளின் மொழிபெயர்ப்பு, பிரஞ்சு மூலத்தின் பனுவல் உருவான விதம், பனுவலில் தெளிவில்லாத, கையெழுத்து புரியாத சொற்கள், காம்யு கொடுத்திருந்த மாற்றுப் பனுவல், இடைச்செருகல், அவரது குறிப்புகள், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் – அறிவுலகத்தேடலுக்கு எல்லாவகையிலும் ஈடுகொடுக்கும் பதிப்பு. வே. ஸ்ரீராமின் இந்த தமிழ் மொழிபெயர்ப்பு, மொழிகளின் தன்மையால், பண்பாடு, கால வேறுபாட்டால் வரும் இடைவெளியை திறமையாக தாண்டி வந்துள்ளது. பொருள் எவ்வாறு முழுமையாக தமிழுக்கு வந்துள்ளதோ அவ்வாறே வாக்கியத்தின் வடிவமைப்பும் தமிழின் தன்மைக்கு இசைந்தவகையில் சிதையாமல் வந்துள்ளது. நாவலில் விவரிப்பு உணர்ச்சியின் தீவிரத்தை எட்டும்போது அதற்கு ஈடுகொடுத்து மொழிபெயர்ப்பின் மொழியும் தீவிரமாகிறது. இதைச்சாதித்த சொற்களின் செறிவும், கோர்வையும் பாராட்டத்தக்கது.
நன்றி-தங்க. ஜெயராமன்

Thursday, 23 June 2016

சிறுகதை மீண்டும் மிகப் பெரியதோர் எழுச்சி


கிட்டத்தட்ட 100 ஆண்டு காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்வண்ணம் ‘தி தமிழ் ஸ்டோரி’ தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. இவ்வாறு தொகுதியைத் தொகுத்து மொழிபெயர்த்தவரும் எடிட் செய்தவரும் கூறுகிறார்கள். ட்ராங்குபார் பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. செம்மொழித் தமிழின் வரலாற்றில் இந்தத் தொகைநூல் ஒரு மைல்கல். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை, திராவிட இயக்கம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண் எழுத்து என அனைத்து முனைகளிலிருந்தும் கடந்த நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுவே இதன் முக்கியத்துவம். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி. 
                                                                       
சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி. 
ஆங்கிலப் பதிப்புத் துறையில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர் இவர். ‘இந்தியன் ரெவ்யூ ஆப் புக்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். நவீனத் தமிழ் வாழ்க்கை, சிறுகதை என்னும் வடிவம் வழியாகக் காலம் காலமாகத் துலக்கம் பெற்றதன் பின்னணியில் இத்தொகுப்பை ஆறு ஆண்டு காலம் உழைத்து உருவாக்கியுள்ளார் தொகுப்பாசிரியர் திலீப்குமார். இவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.
சென்ற நூற்றாண்டில் தமிழ் வாழ்க்கை அடைந்த சலனங்கள், பார்த்த மாறுதல்கள், தாக்கத்துக்குள்ளான இயக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதால் ‘தி தமிழ் ஸ்டோரி’ முன்னுதாரணமில்லாத ஆவணமாகிறது. இந்தத் தொகுப்பு குறித்து திலீப்குமாரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
                                                              
இந்த ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
மேற்கிலிருந்து நாம் வரித்துக்கொண்ட இலக்கிய வடிவங்களில் நமது அதிகபட்ச ஈடுபாடும் சாதனையும் சிறுகதைத் துறையில்தான் காணப்படுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் இந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட விரிவான தொகுப்பு இது. 1913-2000 வரை தமிழ்ச் சிறுகதைத் துறையில் பல்வேறு அழகியல், கருத்து நிலைகளிலிருந்து வினையாற்றிய ஆளுமைகளின் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
                                                                    
பொதுவாக, ஆங்கில வாசகர்களிடையேயும் மற்ற இந்திய மொழியினரிடையேயும் தமிழின் அதிகபட்ச சாதனைகள் சங்க இலக்கியத்தில்தான் நிகழ்ந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது. விளைவாக, தமிழின் தற்கால இலக்கியத்தின் மேன்மை உரிய வகையில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைக் கூறுவதோடு, நூறாண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் முன்வைக்கிறது. கூடவே, தமிழிலும் ஒரு காத்திரமான நவீன இலக்கிய மரபு உள்ளது என்பதையும் நிறுவ முற்படுகிறது.
கதைகளைத் தேர்வு செய்வதில் என்னென்ன அடிப்படைகளை வைத்திருந்தீர்கள்?
தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும் கோணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில், முக்கியமான மூன்று அடிப்படைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டோம்.
வலுவான கதையம்சம்: மொழிபெயர்ப்பின்போது இருவேறு மொழிகளின் நுட்பங்களுக்கிடையேயான முரண்களை மீறியும், ஒரு தரமான இலக்கிய அனுபவத்தை இது உறுதி செய்யும்.
தமிழ் வாழ்க்கை: கதைகள் தமிழ் வாழ்க்கையின் பல்வேறு சமூக, தொழில், பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்டவையாக இருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையின் மாறிவந்துள்ள மதிப்பீடுகளையும் அக்கறைகளையும் மிக இயல்பாக வெளிக்கொணர இது உதவும்.
சிறுகதை வடிவம்: சிறுகதை என்ற வடிவத்தின் மீது ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையும் ஈடுபாடும். அதோடு, கதையின் ஆதார அனுபவத்தின் விவரிப்பில் நேர்மையும் துல்லியமும் பேணப்பட்டிருக்க வேண்டும். இவ்வரையறைகளின் அடிப்படையில் கதைகளைத் தெரிவு செய்தபோது மொழிபெயர்ப்புக்கு உகந்த ஒரு தொகுப்பு எளிதில் உருவாகியது.
இதுபோன்ற சிறுகதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத சில பெயர்களை உங்கள் நூலில் காண முடிகிறது. அவர்களது கதைகளைச் சேர்ப்பதற்கான முக்கியத்துவம் என்ன?
தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்தைப் பற்றிப் பேசும்போது நாம் எப்போதுமே வ.வே.சு.ஐயர், பாரதியார், ஆ.மாதவையா ஆகியோரிடமிருந்தே தொடங்குகிறோம். ஆனால், அந்தக் காலகட்டத்திலும் அதற்கு சற்று முன்பிருந்தும் பலராலும் சிறுகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன. புதுமைப்பித்தன், சிட்டி சிவபாதசுந்தரம் ஆகியோரின் குறிப்புகளைக் கொண்டு மேற்குறித்த மூவருக்கப்பாலும் எனது தேடலை மேற்கொண்டேன். அப்படித்தான் அம்மணி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செல்வகேசவராயர் ஆகியோரின் கதைகளைக் கண்டெடுத்தேன். இவர்களது கதைகள் இலக்கிய நுட்பத்திலும், உள்ளடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளெனக் கருதப்படும் மேற்குறித்த மூவரின் கதைகளுக்கு நிகரானவையாக இருந்தன. இக்கதைகள் முதன்முதலாக இத்தொகுப்பில்தான் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் வரலாறு குறித்து நமது அனுமானங்களை மீள்பரிசீலனை செய்ய இது வாய்ப்பாக அமையும்.
கடந்த நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சிறுகதை வடிவம் என்னென்ன மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பின் வழியாகக் கூறுங்கள்.
பொதுவாக, உரைநடைப் படைப்புகளின் வடிவ எல்லைகள் மிகவும் துல்லியமானவை. அதாவது, அவற்றின் வடிவரீதியான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. சிறுகதை ஒரு அற்புதமான இலக்கிய வடிவம். நாவலைப் போன்று சிறுகதைக்கு ஒரு தொய்வான காலம் என்றுமே இருந்ததில்லை. அது அறிமுகமான உடனேயே மிகச் சிறப்பான முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைந்துவிட்டது. நாம் பொதுவாக ஆ.மாதவையாவைச் சமூக சீர்திருத்தங்களை முன்னிட்டுக் கதைகள் எழுதியவர் என்று நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், அவரது ‘கண்ணன் பெருந்தூது’ என்ற சிறுகதை மிகப் புரட்சிகரமான ஒரு அறைகூவலை விடுப்பதோடு, உயர்ந்த தரத்திலான இலக்கிய நுட்பத்தையும் கொண்டது. முழுமையான முதல் நவீனச் சிறுகதை என்று இதை நாம் கூற முடியும். இந்தக் கதை 1924-ல் எழுதப்பட்டது. ஆனால், 1950, 60-களில் நமது முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் மிகத் தளர்ச்சியான கதைகளை மிகுந்த உற்சாகத்தோடு எழுதியிருக்கிறார்கள். எனவே, சிறுகதைகளில் ‘புதியது’, ‘பழையது’ என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மொழிப் பயன்பாட்டில் காட்டப்படும் நுண்ணுணர்வும் ஒருமையும்தான் சிறுகதை வடிவத்துக்குப் புதுமையையும் பொலிவையும் அளிக்கிறது. தமிழ்ச் சிறுகதைத் துறையில், முப்பதுகள் (புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு.), ஐம்பதுகள் (தி.ஜா.,சு.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சூடாமணி), எழுபதுகள் (அம்பை, பூமணி, ந.முத்துசாமி, ச.கந்தசாமி, வண்ணதாசன், வண்ண நிலவன், ராஜேந்திர சோழன், பிரபஞ்சன்), தொண்ணூறுகள் (எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெருமாள் முருகன், இமயம், பாமா) என்று தொடர்ச்சியாக இலக்கிய அலைகள் உருவாகிவந்துள்ளன. அன்றைய சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப சிறுகதையின் வடிவம் கூர்மையும் உக்கிரமும் அடைந்துவந்துள்ளது என்று வேண்டுமானால் கூறலாம்.
நீங்கள் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன கதைகள், எழுத்தாளர்களைப் பற்றிக் கூறுங்கள்.
நான் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மூல மொழியில் மிக இயல்பாக தொனிக்கும் ஒரு கதை, மொழிபெயர்ப்பின்போது பல சமயங்களில் கூர்மை இழந்து விடுவதுண்டு. இந்த ஆசிரியர்களின் தனித்துவமான மொழிநடையையும், அவர்கள் தங்கள் கதைகளின் உருவாக்கத்தின்போது - வாக்கிய அமைப்பு, உருவகங்கள், வர்ணனைகள் சார்ந்து - எடுத்திருந்த நுட்பமான பல இலக்கிய முடிவுகளையும் மாற்றுவதென்பது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திர வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இலகுவான வாசிப்பு அல்லது மூலப் பிரதியை மேம்படுத்துவது போன்ற காரணங்களை முன்வைத்து எந்த அத்துமீறலையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை. இந்தத் தொகுப்பிலுள்ள எந்தக் கதையையும், நாங்கள் மொழிபெயர்ப்புக்காகச் சிறிதளவும் சிதைக்கவில்லை. இந்த அடிப்படையில் சில கதைகளத் தவிர்த்தோம். இந்த இழப்புக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு எனக்குப் பின்னாளில் கிட்டக்கூடும்.
சமீபத்தில் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
2000-மாவது ஆண்டுக்குப் பிறகு தமிழில் பல முக்கியமான நாவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், பல, உன்னிப்பான வாசிப்பையும் கவனிப்பையும் கோருபவையாக உள்ளன. ஆனால் சிறுகதைகளைப் பொறுத்தவரை இவ்வாறு நிகழவில்லை. நாம் பொருட்படுத்தக்கூடிய சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதை ஆசிரியர்களும் அதிகமில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லப்போனால் சிறுகதை ஆசிரியர்களேகூட நாவல்கள் எழுதுவதை நோக்கிப் பயணித்து வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். வன்ணதாசன், அம்பை, சுதாகர் கத்தக், என். ராம் போன்ற சிலர்தான் சிறுகதை என்ற வடிவத்தில் இன்னும் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள். தற்போது, உலக அளவில் சிறுகதை மீண்டும் மிகப் பெரிய எழுச்சியை அடைந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். தமிழிலும் இது நிகழும் என்று நம்புகிறேன்.
[சிறுகதை மீண்டும் மிகப் பெரியதோர்  எழுச்சியை உருவாக்க வேண்டுமானால், சிறுபத்திரிகைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கும் போக்கு நீங்க வேண்டும். பெரிய பத்திரிகை என்றவுடனே கண்ணை மூடிக்கொண்டு புறக்கணிக்கும் போக்கு இலக்கிய மேதமை ஆகிவிடாது.சிறுபத்திரிகைகளில் எழுதியவர்கள் பெரிய பத்திரிகைகளின் வீச்சையும் விளம்பரத்தையும் வேண்டி நிற்கிறார்கள்.கடந்த 60 ஆண்டுகளாக இலக்கியத்தரம் உள்ளவை என்று இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பலரால் அங்கீகரிக்கப்பட்ட, மிகப்பெரிய 2 தொகுதிகளை வெளியிட்டுள்ள, என் போன்ற பலரது படைப்புகள் இடம்பெறாதது எந்த இலக்கிய அளவுகோலின் பாற்பட்டது? விளங்கவில்லை. அதை வைத்துக்கொண்டு பார்க்கும்போது மொழிபெயர்த்தவர், எடிட் செய்தவர் இன்னும் சற்று பரந்த மனப்பான்மையோடு இயங்கியிருக்கலாம்  என்று சொல்லத்தோன்றுகிறது
இது முழுமை அல்ல. முழுமையை நோக்கிய முதற்பயணம் .தவிர இந்த மாபெரும் முயற்சியில் சிற்சில குறைகள் இருந்தாலும் தமிழின் சரியான பிரதிநிதித்துவத்திற்கு முயலும் இந்த முயற்சியை மனமார வாழ்த்தலாம். 
நன்றி: தமிழ் ஹிந்து.திரு. ஷங்கர்  இராம.சுப்பிரமணியம் 

Tuesday, 21 June 2016

சீருடை அணிந்து ஒருசிங்கம் போல் கர்ஜிப்பார்

                                                                            

ஓரரசு உருவாக்கத்தில் படைகள் உருவாக்கப்படுவது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும், வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கும் என இருமுனை நன்மைகளை உள்ளடக்கியது ஆகும். ஆனால், தன் அரசை நன்முறையில் பாதுகாப்பது என்ற நிலையிலிருந்து நழுவி, பிற நாட்டைத் தன் நாட்டோடு இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழும்போது அங்குப் பகையும் போரும் ஏற்பட்டு, இருநில மக்களும் துன்பமடையும் ‹ழல் உருவாகிறது. மன்னர்களின் ஆசை பேராசையாக நீளும்போது ஏற்படும் தொடர்ந்த போர்களில் அரசு உருவாக்கத்தின் அடிப்படைகளான, மக்களை ஒன்றுபடுத்தல், முறையான பாதுகாப்பான வாழ்க்கை நல்குதல் என்ற பண்புகள் அடிபட்டுப் போகின்றன. அப்போது அரசு உருவாக்கத்தின் மீது கேள்விகள் எழுகின்றன. தலைமைப் பண்பலுள்ளவனின் பேராசையினால் பெருமளவில் மக்கள் கூட்டம் மடியும்போதும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் துன்புறும்போதும் “களிறெதிர்ந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்ற வீர உணர்வு சிலரின் சுயநலத்திற்காகப் பலியாக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது. 
மக்களைக் கொண்டே மக்களைக் கொல்வதுதான் அரசோ? அதுதான் அரசியலா? ஆளும் பரிவினர் எப்போதும் தங்களின் நிலை மாறாமல் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும், இந்த அரசு என்ற அமைப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 
சங்க கால இலக்கியங்கள் இதை அழகாகப் பதிவு செய்துள்ளனர். பனிப்பரதேசத்தில் வாழும் எக்ஸிமோக்களிடம் அரசு என்ற அமைப்பு இல்லை. எனினும் ஒற்றுமையுணர்வோடு வாழ்கின்றனர். இவர்கள் இன்னும் வேட்டைச் சமூக அமைப்பல் வாழ்பவர்களாக இருப்பதற்கு இவர்கள் வாழும் நில அமைப்பு ஒரு காரணம். சிறு புல் கூட முளைக்காத கடும்குளிர் வீசும் பரதேசத்தில் வாழும் இம்மக்கள் மண் சார்ந்த நிலப்பகுதிக்கு வந்தால் இவர்களிடமும் போர்க்குணம் ஏற்பட்டு இவர்களுக்கென்று அரசு உருவாகியிருக்கும். இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு கள்ளும் சோறும் படைக்கும் அன்றைய பழக்கம் இன்று மிகவும் மாறுபட்டுள்ளது. இந்திய எல்லைப்புறங்களில் வீரமரணமடையும் ஒரு படைவீரரின் உடல் வெகுசீக்கிரம் அவரது வீட்டுவாசலுக்கு வருவதுமட்டுமல்லாமல் தகுந்த மரியாதையும் செய்யப்படுகிறது.
-ஜவஹர் பிரேமலதா

செத்துப் பிறக்கும் குழந்தையை வெட்டிப் புதைக்கும் வீர மறவர்கள் வாழ்ந்த நாடு இது. புறநானூற்றின் பல பாடல்களைப் பொருளுணர்ந்து படிக்கையில் படிப்போர் ரோமம் சிலிர்ப்பதைத் தவிர்க்கமுடியாது. அப்படிப்பட்ட நூலாகிய புறநானூற்றின் வீரம், விவேகம், அரசின் கடமை, மக்களின் கடமை, சான்றோர் கடமை போன்று பல தலைப்புகளில் விவாதிக்கும் ஆசிரியர் ஆண்கள், பெண்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் போன்றோர்களைப் பற்றியும் விளக்குவது போற்றுதற்குரியது.
பண்டையத் தமிழர்களின் வீரத்தை முதன்மையாகவும் மற்ற எல்லா குணநல்களையும் அந்த வீரத்திற்குக் குறைவில்லாமலும் விமரிசிக்கும் ஆசிரியர் மிக ஆழ்ந்த புலமையுடன் இந்த நூலை ஆக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. 
படைவீரர்களின் குணநலன்களையும் போர்முறைகளையும் விளக்கும் திருமதி ஜவஹர் பிரேமலதா வாய்ப்பு கிடைத்தால்  சீருடை அணிந்து ஒருசிங்கம் போல் கர்ஜிப்பார் என்பதை உறுதிசெய்கிறது இந்த நூல்.
இளைஞர் சமுதாயம் இந்த நூலைப் படிக்கப் பள்ளி, கல்லூரி மற்று சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டாயம். அரசு இந்த நூலைப் பெருமளவு வரவேற்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்பிடவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்.
கர்னல் பா. கணேசன், V.S.M
943.ஏ பிளாக், 17வது மெயின் ரோடு 
அண்ணாநகர், சென்னை - 40
தொலைபேசி - 044-26163794.. செல்பேசி - 0-9444063794

Wednesday, 15 June 2016

“இலக்கைத் தேடும் ஏவுகணை”


                                                            
மேஜர் ஜெனரல் எம்.வி. ஆனந்தகிருஷ்ணன் .ஏ.வி.எஸ்.எம்.

கோடியில் ஒருவருக்கே  கிடைக்கும் வாய் ப்பு

நாட்டுப்பற்றின் மீது கொண்ட மதிப்பின் விளைவாக இராணுவத்தில் சேர்ந்து தம் பணியை உண்மையான விசு வாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் நிறைவே ற்றி வரும் பல்லாயிரம் இராணுவ வீரர்களில் கர்னல் கணே
சன் மாறுபட்டவர். அவரது நல்வினை அவரை இரு இந்தியப்போ ர்களில் கலந்து நிறைந்த அனுபவத்தைப் பெறச்செய் திருக்கிறது.
@மலும் அவர் சே வைக்கு அணி சே ர்ப்பது போ ன்று அமைந்தது அவர் அண்டார்க்டிகாவில் தக்ஷிண் கங்கோத்ரி பனி ஆய் வுக்கூடத்தின் தலைவராகப் பொறுப்பே ற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியது கோ டியில் ஒருவருக்கே  கிடைக்கும் வாய் ப்பு.
பாரத நாடு பெருமை கொள்ளவேண்டிய பல அரிய ஆற்றல்கள் பெற்ற இந்த இராணுவ அதிகாரியின் பால் நான் கொண்டுள்ள மதிப்பு தனி வகையானது.

இராணுவசேவையும் சமூகமும் 
மே ஜர் ஜெனரல் ஜே .ஜே .மணவாளன் .ஏ.வி.எஸ்.எம்.
நான் கர்னல் திரு.பா.கணேசன்  அவர்களின் தலைமையின் கீழ் இராணுவத்தில் பணியாற்றியவன். அவரது சீரிய சே வை உணர்வு தன் கீழ் பணியாற்றும் அதிகாரியாயினும் எளிய சிப்பாய்  ஆயினும் அவர் காட்டிய நிலை மாறாத மரியாதை , அணுகுமுறைஆகியனவற்றை நே ரடியாகக் கண்டவன். அதனால்  பயன் பெற்றவன். ஒரு வகையில் அவர் எனது வழிகாட்டி. இராணுவப் பணி என்பது  மற்ற அரசாங்க உத்தியோகம் போல் தான் என்று மிக சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவப் பணி என்பது சே வையே . அப்படி சே வை புரியத் தேர்வாகி, அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு படைப் பிரிவில் சேர்ந்த பிறகு உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியம். கூட@வ பணி சார்ந்த வேலைகளில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் இராணுவத்தினர்களின் கடமையாகிறது. ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவு தலைவனோ சொல்லித்தான் தனது உடல் நலத்தையோ அல்லது பணித்திறமையையோ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
“எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற இவரது  முதல்   நூல் இராணுவ அதிகாரியான கர்னல் பாவாடை கணேசனது ஆரம்பகால இராணுவ வாழ்கை பற்றியது. பெற்றோர்களுடன் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று பெரிய குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து வளர்ந்த கணேசன் யாருமே எதிர்பாராமல், முன்னர் எக்காலத்திலும் அறிமுகமில்லாத விதத்தில் இராணுவ அதிகாரியானார். ஆரம்பகால இராணுவ வாழ்க்கையில் குடும்பத்துடனான பாசப்பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விடுபடவும் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட இராணுவ வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ள்ளவும் வைத்த காலமது. அந்த முதற்பகுதி 30 கடிதங்களடங்கியது. இராணுவ அதிகாரியாகத் தேர்வானது முதல் 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தானிய போர் அதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி “பங்களாதேஷ்” என்ற தனி நாடாகியது என்பதுடன் முடிகிறது.
                                                   
இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.
இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மே லும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை வே ண்டி வாழ்த்துகிறே ன்.
நூலில் சில வரிகள் 
அவர் ஒரு இராணுவ அதிகாரி! ஆரம்ப காலத்தில் ‘"Officers are born with silver spoon''” என்ற பெருமையான உதாரணத்திற்கு விளக்கமான பயிற்சியும் வாழ்க்கை முறையும் கொண்டிருப்பதைக் கண்டவர். கணேசன் தனது உற்றார் பெற்றோர் அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் கலங்கினார். ரயில் வண்டி ஓடிக் கொண்டிருக்க மிகவும் புண்பட்ட இதயத்துடன் தான் விளையாடித் திரிந்த வயல் வெளிகள் பின்னோக்கி ஓடுவது கண்டு மிகவும் கண் கலங்கினார். சிறு வயதில் ஒருமுறை அவரது தம்பிக்கு காலில் முள் தைத்து புரையோடி விட்டது. கிராமப்புற மருத்துவன் வந்து வைத்தியம் பார்த்தான். கால் பாதத்தில் மெல்லிய கம்பியை விட்டு மேல்புறமாக இழுத்தான். தம்பி வலியால் துடித்த பொழுது கணேசனை தம்பி மேல் உட்கார்ந்து அவர் அசையாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இரத்தமும் கீழுமாக வெளியேற தம்பி மிகவும் துடித்தார். பின்னர் பச்சிலை வைத்துக் கட்டினார்கள். 15-20 நாட்களில் குணமாகி விட்டது.
இன்று கணேசனின் மனதிலிருந்தும் அப்படித்தான் இரத்தமும் சீழும் வெளியேறுகிறது. “காலம் என்ற வைத்தியன் கட்டும் பச்சிலையினால் அந்தப்புண் குணமாக வேண்டும். இந்த ஊரும் மனிதர்களும் மீண்டும் ஒருமுறை அவர் இங்கு வரநேர்ந்தால் ஒரு சமயம் அவரை வரவேற்கலாம். மனதில் அலை அலையாக எழும் உணர்வுகளை வெளியில் யாருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த துக்கமும் துயரமும் தனது மனதில் தவறான அணுகுமுறையால் உருவானவை என்பதை கணேசன் ஆணித்தரமாக உணர்ந்தார். இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே என்று தானே உருவாக்கிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தார். இல்லை! இழப்பதற்கு இன்னும் ஏராளமானவை அவரிடம் இருக்கிறது. 30 வயதே ஆன அவரின் எஞ்சிய வாழ்க்கை இமயம் போல் எழுந்து நிற்கும். அவர் ஏன் அதை இழக்க வழிதேட வேண்டும்? உடலாலும் மனதாலும் உறுதியானவராக அவர் ஆகவேண்டுமானால் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் கொள்ள வேண்டும்......
பதிப்பாளர் முகவரி.
Dharini Padhippagam,                                                                                  
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341



Tuesday, 14 June 2016

மாறிச்செல்லும் மாற்றங்கள்


மாறி மாறி மாற்றங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. நாம் தான் மாற்றம் மட்டுமே மாறாதது என்று  கருதுகிறோம். அது குறித்து மட்டுமின்றி அன்றாடம் வீட்டிலிருந்து  அலுவலகம் செல்லும் வழியில் நேரும் அனுபவங்களை  அற்புதமாகப் பதிவு செய்துள்ள இந்த நூலில் கவிதாயினி ஜி.ஜே . தமிழ்ச்செல்வி தம் கருத்துக்களை மிகச் சிறப்பாகப் பதிவு செய்கிறார்.இந்த வகை நூல் தமிழில் இது வரை வராத தனி ஜெனர். பலர் எழுத முன்னோடியாக இருக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த நூல் தனி ரகம்   
பொதுவில் ஆண்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் மூத்த மாதர்கள் கூட அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க் கிறார்கள். 
அன்று, மதிய உணவிற்காக வீட்டிற்கு என் பயணம்.  கொளுத்தும் சூரியன் தன் கோரக் கரங்களால் அக்கினிப் பூக்களை என் மேல் சொரிந்து தள்ள, வியர்வை முத்துக்கள் என் முகத்தை அலங்கரிக்க என் சீரிய சைக்கிள் ஓட்டத்தைத் தடுத்தது அந்த குரல். 
அடையாளம் மாறியிருந்தார் அவர். காதில் இருந்த ஒற்றைக் கம்மல் காணாமல் போய் இருந்தது. பொத்தான்கள் ஒழுங்காக அதனதன் இடத்தில் பொருந்தி யிருந்தன.
 “இது என் பொண்டாட்டி, இது என் பொண்ணு,” என்று அறிமுகப்படுத்தினார். 
மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை நான் எதிர்பார்க்காத தருணத்தில் என் கரங்களின் தவழ விட்டாள் அந்த பெண். 
“இவங்க தான் கையெழுத்து போட அன்னிக்கு எனக்குக் கத்துக்குடுத்தாங்க”  என்று மனைவியிடம் கூறினார் அவர். என்னவோ போல் இருந்தது எனக்கு. கைகளில் அந்தக் குழந்தை குறுகுறுவென்று நெளிந்தது. அது எனக்கு ஒரு புத்துணர்வு. புதியதொரு காந்த தாக்கம்.  ஒரு முத்தத்தை தவிர  அந்த குழந்தைக்குத் தருவதற்கு ஒன்று மில்லை.அந்தத் தருணத்தில்  என்னிடம்
புத்தகத்தில் குறிப்பிட்ட பாடங்களை  மனனம் செய்து,  தேர்வு நேரத்தில்  படித்ததை எல்லாம் கொட்டி விட்ட பிறகு , நாளடைவில் அது மறந்தே போகிறது. என் தாத்தா அவர் காலத்தில் படித்த பாடல்களை நினைவில் வைத்திருந்து எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் நான் படித்த மனப்பாடச் செய்யுள்கள் கூட இன்று என் நினைவில் இல்லை. எதையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போதே நினைவில் நிற்கிறது. என் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் விதமாக நான் படித்த கல்வி இல்லை என்பது தான் உண்மை.  
கற்றல் என்பது பாடப் புத்தகங்களில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நிகழ்விலும், அனுபவத்திலும், பழகும் ஒவ்வொரு மனிதர்களிடமும், விலங்குகள் இடமிருந்தும் கூட நடைபெற வேண்டும். 
வெளியிட்டோர் 
 Dharini Padhippagam,                                                                                       
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341 

Saturday, 11 June 2016

வைணவ ஆசார்ய வைபவம்


vaishnaval copy
வைணவசமயம்மிகத்தொன்மையானது. வேத காலத்திலேயே அது நிலைபெற்றிருக்கிறது. விஷ்ணுவை ‘உபேந்திரன்’ என்று இருக்குவேதம்கூறுகிறது. விஷ்ணு என்ற சொல்லிலிருந்துதான் வைணவம் என்ற சொல் தோன்றியது. சங்கநூல்களுக்கெல்லாம் முந்திய தொல்காப்பியத்தில் ‘மாயோன்மேயகாடுறைஉலகமும்’ என்று வருகிறது. மாயோன்என்பதுதிருமாலையேகுறிக்கும். பண்டைய தமிழகத்தின் முல்லைநில மக்கள் மாயோனைத் தெய்வமாக விளங்கினர்.
வைணவ சம்பிரதாயப்படி வைணவத்தை வளர்த்தபெருமக்களைஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் என இரு வகையாகக் கூறுவர். ஆழ்வார்கள் எனப்படுவோர் அவதார ஞானிகள்ஆவர். ஆழ்வார்கள் என்பதற்கு பகவத் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்கள் என்பது பொருள். ஆச்சாரியர்கள் என்பவர்கள் ஆழ்வார்களின் நெறியைப் பின்பற்றி வைணவத்தைப்பரப்பியவர்கள். அவர்கள் மீது கொண்ட பற்றே இக்கட்டுரைகளில்பொதிந்துள்ளன.
வைணவ ஆசார்ய வைபவம் என்ற இந்த அற்புதமான நூலில் வளவ.துரையன் அவர்கள் முக்கியமான ஆசாரியர்களைப் பற்றி எழுதியுள்ள இதயத்தைத் தொடும் வரிகளும் கூடவே தந்துள்ள படங்களும் இந்நூலினை அழியாப் புகழுக்கான அமரத்துவம் வழங்கும் என்பதில் ஐயமே இல்லை. இடையிடையே வழங்கியுள்ள பாசுரங்களும் சிறந்த ரசனையையும் பக்தி உருக்கத்தையும் வழங்குகின்றன. வாசிக்க, வாசிக்க எம்பெருமான் திருவடிகளில் நாம் நிற்பது போன்ற அனுபவம் சித்திக்கிறது. திரு. வளவ. துரையன் அவர்களுக்கும் பிரசுரித்த திரு. வையவன் அவர்களுக்கும் திருமால் எல்லாப் பெருமைகளையும் ஐஸ்வரியங்களையும் அளிக்க வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
விதேயன்
எஸ்.லக்ஷ்மி நரசிம்ஹன்
LN copy
Laxmi Narasimhan.M.A.M.Phil20A2A,Mayura Apartments,Aziz Nagar 1st Street,Kodambakkam,Chennai600024,9840576450

Wednesday, 8 June 2016

மற்றும் ஒரு புகழாரம்


 அணுசக்திபிரச்சினைகளும் மெய்ப்பாடுகளும் நூலுக்கு 

மற்றும் ஒரு புகழாரம்  

                                                   

                                                                       
பக்கம் 1

                    
பக்கம் 2


சிறுகதை-நேற்று, இன்று, நாளை

                                 
சிறுகதை-நேற்று, இன்று, நாளை
தமிழ்ச் சிறுகதை உலகில் - நாவல் களத்துக்கும் - பல போக்குகளும், கோட்பாடுகளும் தமக்கான பெயர்களைத் தாங்கி உலவிவருகின்றன.  யதார்த்தம், மாய யதார்த்தம், இருத்தலியல், அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று பல பெயர்கள்.  இவையனைத்தும் மேலை இலக்கியப் புலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள்தான்.  பொதுவாக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட போக்கு இயல்பாகப் பரிமாணம் பெற்று, செறிவடைந்து இறக்குமதி செய்து அதற்கேற்ற படைப்புமுயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  எனவே, இதில் ஒரு செயற்கைத்தனமும், அந்நியத்தனமும் குடிகொள்கிறது.  
ஒவ்வொரு புதுப்பெயர் வரும்போது அதை வலுக்கட்டாயமாகத்  திணித்து, அதற்கேற்ப கதை உற்பத்தி செய்யும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  குறைப் பிரசவங்களுக்கும் நிகழ்கின்றன. அதே நேரத்தில் இந்தப் புதிய போக்கின் தத்துவத்தையும், அடிநாதத்தையும், சாரத்தையும் உள்வாங்கி அவற்றைத் தன் படைப்புமுயற்சியின் உயிர்ப்புடன் சுவீகரித்துக்கொள்ளும் படைப்பாளிகளும் உள்ளனர்.  காலப்போக்கில் இந்தத் தடங்களில் குறிப்பிடத்தக்கன செய்த படைப்பாளிகள் உள்ளனர். 
தமிழ்ச் சிறுகதை உலகில் உலகத்தரம் பெற்ற ஏராளமான சிறுகதைப் படைப்புகள் பிறந்துள்ளன.  எனவே இந்தக் களத்துக்குச் செறிவூட்ட புதிய போக்குகள் நம்மிடமிருந்தே முகிழ்த்தெழ வேண்டும். அவற்றுக்கு பெயர்சூட்டுவிழா பிறகு ஏற்பாடு செய்யலாம்.  இதன் மூலம்தான் மோஸ்தர் காற்றுக்கேற்ப பாய்மரம் விரிக்கும் நகல்களின் உற்பத்தி குறையும். உயிர்த்துடிப்புள்ள புதிய படைப்புகள் உருவாகும். 
..எதிர்காலத்தை நோக்கும் நேரம் வந்துவிட்டது. இன்றை தமிழ்ச் சிறுகதை எதிர்கொள்ளும் சில முக்கியமான அம்சங்களைப் பற்றி ஏற்கனவே மேலெழுந்தவாரியாகப் பார்த்துள்ளோம். தமிழ்ச் சிறுகதை ஒரு திருப்புமுனைப் புள்ளியில் இருப்பதாக நான் காண்கிறேன்.  சிறுகதை என்ற வகைமையின் ஈர்ப்பு தேய்ந்துகொண்டுவருகிறது.  
பத்திரிகைகளிலும் சிறுகதைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டுவருகிறது. இது வெகுஜனப் பத்திரிகைகளுக்கும் சிற்றிதழ்களுக்கும் ஒருங்கே பொருந்தும். 
சுய சரிதம், சுய அனுபவம், சுய தரிசனம் சார்ந்த எழுத்துக்கள் சிறுகதையின் இடத்தைப் படிப்படியாகப் பிடித்துவருகின்றன.  வாசகர் களத்திலும் தீவிரப் படிப்புக்கான நேர ஒதுக்கீடு குறைந்துகொண்டே வருகிறது.  தன் பணிக்களத்தில் முன்னேற வேண்டுமென்ற உந்துதல் இலக்கிய வாசிப்பைப் படிப்படியாகப் புறந்தள்ளிவருகிறது. 
சிறுகதை பொடிக்கதையாகவும், மைக்ரோ கதையாகவும் சுருங்கிச் சுருங்கி மறைவு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் இன்றை கள யதார்த்தம், எனவே சிறுகதை தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு  எதிர்கொள்வது என்பதற்கான எளிதான விடை எனக்குப் புலப்படவில்லை. 
எனினும் இந்தப்பிரச்சினையை இலக்கியவாதிகள் பொறுப்புணர்வுடன் எதிர்கொள்ளவேண்டும். எழுத்துவடிவில் படிக்கும் நேரமோ, ஆர்வமோ இல்லாத இளைய சமூகத்தை, நல்ல குரலில் பதிவு செய்து சிறுகதை ஒலிப்பதிவுகள் மூலமாக அணுக முயற்சிக்கலாம். 
பல பத்தாண்டுகள் எதிர்கொள்ளாத அதிவேகமான மாற்றங்கள் இன்றைய சமூக பொருளாதாரக் களன்களின் யதார்த்தம். இதனை இலக்கியம் மூலையில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.  மாற்றத்தின ஊக்கியாக விளங்கும் வாய்ப்பு குறைந்தாலும், மாற்றத்தை அர்த்தமுடன் எதிர்கொண்டு அதில் சாரத்தியம் செய்யும் ஆற்றலை இலக்கியம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  செயல்படுத்தவேண்டும். இந்த மாற்றங்கள் எழும்பும் சில கவலைகளையும் கேள்விகளையும் பற்றிச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.
-28 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய[விலை.ரூ.15/= மட்டுமே] ஆனால் மிகவும் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட இந்த நூலை வெளியிட்டிருப்பது:-
Dharini Pathippagam
4 A Ramea Flats
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135,Mobile.9940120341


Tuesday, 7 June 2016

தமிழ் நாட்டு காண்டேகர்

உயிரோட்டம்


எழுத்தாளர்   வையவன் அவர்களின் நாவல். சென்னை தாரிணி பதிப்பக வெளியீடு.  
ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஒரு ஜீவ ஊற்று புதைந்து உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர்ந்தால் மண்ணில் சொர்க்கத்தை உருவாக்கி விட முடியும் என்ற கருத்தை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது உயிரோட்டம் நாவல்.
FIRM NAME: DHARINI PATHIPPAGAM
FIRM ADDRESS:4A,RAMEA FLATS,32/79 GANDHI NAGAR 4TH MAIN ROAD, ADYAR, CHENNAI-600020
MOBILE NO: 9940120341 

VAIYAVAN - UYIROTTAM             300                       RS=350



           நாவலை முடித்ததும் நம்மை விடாமல் துரத்துபவள் மனோரமாதான். பகட்டான தோற்றமும், நாகரிக பேச்சும், அரைகுறை ஆடையும், மிடுக்காகக் காரை தனியாக ஓட்டி வரும் கல்லூரிப்பட்டம் பெற்ற மிதர்ப்பும் முன்பின் அறிமுகமில்லாத இளைஞர்களிடம் உரிமையோடு பேசும் மேட்டிமைத்தனமும் உள்ள பெண்ணாக மனோரமாவை நாவலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். நாவலில் வரும் ஒரு சிறு பாத்திரம் என்றளவிலேயே வாசகர் அவளை முதலில் அணுகுவார்.

இரண்டாவது சந்திப்பிலேயே ரகுராமனிடம் தனியாகக் காபி குடிக்க அழைத்துத் தன் காதலை வெளிப்படுத்தும்போது இன்றைய சீரழிந்து வரும் இளைய சமூகத்தின் பிரதிநிதியாகவே தோன்றுகிறாள். ஆனால் இலட்சிய வேட்கையும், விவேகானந்தரின் கொள்கைகளில் கொண்டுள்ள பிடிப்பில் நாட்டைச் சீர்திருத்திவிட வேண்டுமென்ற வைராக்கியமும் கொண்ட இரகுராமனின் அலட்சியமான பார்வையும் உதாசீனமும் மனோரமாவை அப்படியே புரட்டி போட்டு விடுகின்றன. ஒரு காதல் இந்த மாயத்தைச் செய்யுமா எனில் உண்மைக் காதல் எதைத்தான் செய்யாது என்று நிரூபிக்கும் வகையில் மலை சரிந்து விழுந்து வளமான மண் பூமியாவதைப் போல் மனோரமாவும் மாறிப்போய் விடுகிறாள். தாயைப்போலப் பிள்ளை என்ற பழமொழியைப் பொய்யாக்கி உயர்ந்து நிற்கிறாள்.


          ரகுராமனின் அலட்சிய நோக்கிற்கான காரணத்தைத் தன்னிடம் தேடுகிறாள். தாயின் அலங்கோலமான வாழ்க்கை பிடிபடுகிறது.
 
    பின்னால் ரகுராமன் புலி முடியின் அடியில் ஜீவ ஊற்றைக் கண்டறிந்து அதைத் தூர்த்து ஊற்றை வெளிப்படுத்தி ஜவ்வாது மலையின் தரிசாகக் கிடந்த ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பையும், தன் உழைப்பினால் பசிய வயல்களாக்குகிறான். ஆனால் மனோரமாவின் மனதில் உள்ளே மறைந்து கிடந்த ஜீவ ஊற்றையும் அவன் தன் அலட்சியக் கோடாரியினால் திறந்து விட்டான் என்றே சொல்ல வேண்டும்.

                               
எழுத்தாளர்  வையவன்

         அதுவரை கருணை என்ற ஜீவ ஊற்றை மறைத்துக் கொண்டிருந்த அவளுடைய நாகரிகப்பூச்சு, மேட்டிமைத்தனம், மிடுக்கு அனைத்தும் தகர்த்தெறிந்து உண்மைக் காதல் சமூகச் சேவையாக வெளிப்பட்டு, அவள் இருக்குமிடமெல்லாம், செல்லுமிடங்களெல்லாம் பயன்பெறுகின்றன. மனோரமா ஒரே பெண்ணாகச் செல்வச் செழிப்பில் வளர்ந்தவள். செல்வம் புரளும் கேளிக்கைகள், பொழுதுபோக்குகள், வசதி வாய்ப்புகள் இவையனைத்தும் தாயின் ஒழுக்கக்கேட்டினால் கிடைத்தவை என்றுணர்ந்தளவில் அனைத்தையும் சித்தார்த்தனைப் போல் உதறிவிட்டு எளிய புடவையோடு தாயை எதிர்த்துக் கொண்டு வெளியேறி விடுகிறாள். தாய் வந்து பலமுறை அழைத்தபோதும் மறுத்து விடுகிறாள். நாவலாசிரியர் ஓரிடத்தில் கூறுகிறார்.

 ""தனிமனித மனசாட்சிதான் சமூக மனசாட்சி. நியாயமாக ஒவ்வொருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால், சமூகச் சேவை அப்போது தான் பூர்த்திப் பெறுகிறது"" (ப-130) எவ்வளவு சிறந்த உண்மை. தனியாக யாரும் சமூகத்திற்குச் சேவை செய்யக் கிளம்ப வேண்டாம். ஒவ்வொருவரும் சரியாக இருந்தாலே அதுவே பெரிய சமூகச் சேவை. மனோரமாவின் வைராக்கியம் மயான வைராக்கியமல்ல.  

         உடல் ஊனமுற்றோர் விடுதியில் கிளார்க் உத்தியோகத்தை மனோரமா விரும்பி ஏற்றுக் கொள்கிறாள். அழகினைக் கவர்ச்சியான பலமாகத் தரித்துக்கொண்டு துள்ளித் திரிந்த மனோரமா எளிய ஆடை உடுத்தி உடல் ஊனமுற்றோருக்கு சேவை செய்யும் பணிப்பெண்ணாக மாறிப் போனாள். எல்லாம் ரகுவின் காதலுக்காக. ஆனால் அவன் இந்துமதியை விரும்புவதையறிந்தும் நிலை கலங்கிப் போகிறாள். எனினும், ரகுவின் இலட்சியக் கனவிற்கு வடிவம் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்ததும் மீண்டும் உயிர்த்தெழுகிறாள். இந்துமதி இறந்த பின்னும் ரகுவின் மனம் மாறாததை உணர்ந்து இலட்சியத் தோழமையாகவே அவனுடைய தேச முன்னேற்றப் பணியில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள்.


          இந்நாவலில் வரும் ரகு, மனோரமா, ராஜு, மீரா என்ற நான்கு பாத்திரங்களுமே தேச முன்னேற்றத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். விவேகானந்தர் காண விரும்பிய இலட்சிய மாந்தர்கள் மனோரமா உதறிய இன்ப வாழ்க்கையை அவள் தாயார் சந்திரா தேவியால் உதற முடிவதில்லை. தன் மகள் எளிய புடவையைக் கட்டிக் கொண்டு சேவை செய்யப்புறப்பட்டதை அவளால் சீரணிக்க முடியவில்லை. தன் வாழ்க்கையின் இழிவை உணர்ந்தும், இழிவை மறக்க மீண்டும் இழிவையே நாடிடும் மனப்போக்கையே இறுதிவரை கொண்டிருக்கிறாள். பகட்டான வாழ்வை, அது தரும் சுகத்தை அவள இழக்க விரும்பவில்லை. இறுதியில் மகளை மரணப் படுக்கையில் கண்டளவில் சித்த பிரம்மையடைந்து இறந்து விடுகிறாள்.


      சந்திராதேவி,   ‘தன்னம்பிக்கையும் தெளிவான தரிசனமும் உள்ள நாடு, தன் தேசியத் தன்மைகளை இடைவிடாது காப்பாற்றிக் கொள்ளப் போராடி வரும்நாடு இந்தியா என்று பெருமையுள்ள இந்தியா தற்போது அந்நியக் கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருவதைக் குறித்துக் கூறும் அமெரிக்கரான எரிக் நியூட்டனின் பேச்சை சுத்த போர் என்று ஒதுக்கி விடுகிறாள். அந்நியக் கலாச்சாரத்தில் தன் தாய்மை உணர்வைக் கூடத் தொலைந்து விடும். சந்திராதேவி ஓர் எச்சரிக்கை பாத்திரமாவாள். புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவு நேர டிஸ்கோத்தேக்களுக்குச் செல்லும் பெண்கள் ஏனோ நினைவிற்கு வருகிறார்கள்.


             ஜவ்வாது மலையின் புலிமுடியின் அடிவாரத்தில் நாகப்பாறை சுனையிலிருந்து விழும் நீர் ஜீவ ஊற்றாக மண்ணுக்குள் புதைந்திருக்கும் இரகசியத்தைஉயிரோட்டம்கதையின் நாயகன் தன் கடின முயற்சியினால் கண்டறிகிறான். அதைத் தனியொருவனாகவே வெட்டி அந்த ஊற்றை வெளிக் கொணருகிறான். அதுபோல மகத்தான மனித ஆற்றல்களையும், இயற்கை வளத்தையும் கொண்டுள்ள பாரதப் பூமியில்தான் பஞ்சமும் பட்டினியும் வேலையில்லாத் திண்டாட்டமும். நாவலில் ஓரிடத்தில்தங்கம் வளிஞ்சு வீணாகிற மாதிரி’ (ப-293) என்றொரு தொடர் வருகிறது. தண்ணீரை மட்டுமல்ல இந்திய மக்களின் ஆற்றல்களும்கூட அப்படித்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாசூக்காகத் தர்மானந்தா பாத்திரம் மூலம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். தெய்வ நம்பிக்கைகளாலும், விதி மேலுள்ள முடங்கிப் போன மக்கள் அறிவை நம்பாமல் அந்நியர்களுக்குப் பின் செல்லும் ஆட்டு மந்தை கூட்டங்களாக மாறிவிட்ட அவலநிலையை வேதனையோடு விவரிக்கிறார் நாவலாசிரியர்.
 
    விவேகானந்தர் எதிர்பார்த்தபடி நூறு இளைஞர்களில் ஒருவராவது அவர் வழியில் நடந்தால் பல லட்சம் பேர்களுக்கு வாழ்வும் உணவும் கிடைக்கும் என்பதை ரகுநாதன் பாத்திரவழி நாவலாசிரியர் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் கையில்தான் என்று உறுதியாக நம்பிய விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.



   தர்மானந்தா பாத்திரமாக நாவலாசிரியரின் குரலே உரத்து ஒலிக்கிறது! நான் சந்தித்த இந்தியன் அடுத்த நபரின் உழைப்பிலே நம்பிக்கை வைத்திருக்கிறான். தன்னம்பிக்கையற்றவனாக, முதுகெலும்பில்லாத புழுவைப் போல் விதியை நொந்தவனாக. நகரத்து வாசியோ ஏழையின் சோற்றிலிருந்து சாமர்த்தியமாகத் திருடுபவனாக. . . . உடல் உழைப்பில்லாத கௌரவ வேலையை நாடி நகரத்திற்குச் சென்று, வேலையில்லை என்று விதியை நொந்து, கடவுளைச் சபித்து, கலகம் செய்கிறான். மறுபுறம் விவசாய நாடான இந்தியாவில் விவசாய வேலை செய்வதற்கு யாரும் தயாராகவில்லை.கிராமத்து ஏழை விவசாயியோ, கற்பனையில் வாழும் லட்சக்கணக்கான சோம்பேறிகளுக்குச் சோறு போட மாள்கிறான்.



  தன்னை நம்பாதவன் தெய்வத்தை எப்படி நம்புகிறான்? தெய்வத்தைப் பேராசைக்காகவே இந்தியன் நாடுகிறான். அறிவே தெய்வம் என்பதை உணர்ந்து உடலுழைப்பினால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையை என்று ஒவ்வொரு இந்தியனும் உணர்கிறானோ அன்று தான் புதிய இந்தியா உதயமாகும் என்கிறார். தொழிற்சாலை வேலைநிறுத்தம் குறித்து நீலகண்டம் பிள்ளை கூறும் தேசத்தின் நட்டக்கணக்கு பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அவரவர்க்கு அவரவர் தேவை பெரிது. தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை குறித்து ஆசிரியரின் பதிவு உண்மைதான் எனினும் தூங்குவது போல் நடிப்பவர்களை யார் எழுப்புவது? ரகுநாதன் போல் ஒவ்வொரு தொழிலாளியும் இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் ஆசை. நீலகண்டம் பிள்ளையின் மூலமாக அப்படிப்பட்டவர்களைப் பாராட்டுகிறார்.


ஜவ்வாது மலை, டால்ஸ்டாய் பண்ணை, புலிமுடி ஊத்து, காட்டுத்தீ, வீராவலசை முட்காடுகள், சீர்திருத்தப்பட்ட வயல்பகுதி அனைத்தையும் ஆசிரியர் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். ஜவ்வாது மலையின் பூர்வகுடி மக்களின் அறியாமை, பயம், கடும் உழைப்பு, வறுமை இயற்கைச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளாத பேதைமை போன்ற குணங்களுடன் உன் அச்சு அசலாகப் படைக்கப்பட்டுள்ளனர்.
மீராவின் சித்தப்பா குப்பண்ணா பாத்திரத்தின் மீது நாவலின் தொடக்கத்தில் கோபம் வருகிறது. நடன மாதுவானஅவளை அவள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு மிகுதியாகக் கட்டுப்படுத்துகிறாரோ என்று அவள் ஆத்மநாபனைக காதலிப்பதை அறிந்து மறுப்புத் தெரிவிக்கும்போது மீராவை நினைத்துப் பரிதாபம் தோன்றுகிறது.

           ஆனால் நாவல் வளர்ச்சியில் குப்பண்ணா பாத்திரம் மிக உயர்வான இடத்திற்குச் சென்று விடுகிறது. நாடோடியாகத் திரிந்த அவர் தாய் தந்தையற்ற குழந்தை மீராவை தோளில் போட்டுக்கொண்டு வந்த நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கும் வரையில் தன்னைப் பற்றியே நினைவையே மறந்து மீராவின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்துக் கொண்டு விட்டதைச் சிறு சிறு சம்பவங்கள் வழி நாவலாசிரியர் அழகிய கோட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகிறார்.  

          ஆத்ம நாதனை மீரா காதலிப்பதை அறிந்ததும், கண்டிப்பதும், ஊர் மாற்றுவதும், அந்த ஊருக்கும் ஆத்மநான் தேடிக் கொண்டு வருகையில் அவனின் நிலையற்ற வாழ்க்கையைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திக் கெடு வைத்து திருப்பியனுப்புவதும் கெடு முடிவதற்குள் எதிர்பாராமல் ஆத்மநாபன் புகழின் உச்சாணிக் கொம்பிற்குச் செல்வதும், எவ்வளவு மீராவை அடையத் துடித்தானோ, அவ்வளவு மறந்தாற்போல் புறக்கணிப்பதும் மீராவை நினைத்து குப்பண்ணா இரத்தக்கண்ணீர் வடிப்பதும் விறுவிறுப்பான சதுரங்கப் பலகையாட்டத்தையொத்துச் சம்பவங்கள் நகர்கின்றன. 

             குப்பண்ணா ஆத்மநாதனை பகடைக்காயாக நகர்த்த, காலம் ஆத்மநாபனை ஆடுபவனாகவும் குப்பண்ணாவை பகடைக் காயாகவும் மாற்றுகிறது. இடையில் வெட்டப்படுவதென்னவோ மீராவின் உண்மைக் காதல்தான். ஆனால் குப்பண்ணா தன் அனுபவத்தினால் மீராவை ஆத்மநானிடமிருந்து காப்பாற்றி விடுகிறார் என்றே சொல்லலாம். புகழ் என்னும் போதையில் வாழ்க்கையின் மதிப்பீடுகளை இழக்கும் ஒரு சாதாரணச் சபல மனிதனான ஆத்மநாதனிடமிருந்து இலட்சிய வேட்கையுள்ள மீரா குப்பண்ணாவின் சாதுர்யத்தால் தப்பித்துத் தான் விடுகிறாள். இனக் கவர்ச்சியைக் காதல் என நினைத்து ஏமாறும் எத்தனையோ இளம்பெண்ணில் ஒருத்தியாகவே மீரா தோன்றுகிறாள்.

          ஆனால் காதல் போயின் சாதல் என வாழ்வைத் துறக்காமல் தியாக மனிதரான குப்பண்ணாவைப் புரிந்து கொண்டு அவருக்காக வாழ முடிவெடுத்து மீண்டும் சலங்கையை நாடுகிறாள். இறுதியில் உண்மைக் காதலை ராஜுவிடம் காண்கிறாள். இழந்த காதல் தியாக வாழ்க்கை சேவை மனப்பான்மை உண்மை மாந்தர்களை இனம் காண அவளுக்கு உதவுகிறது. ராஜு மீராவை முதலில் விரும்பினாலும், அவள் ஆத்மநாபனை விரும்புவதறிந்து விலகி விடுகிறான். பின் மீராவின் காதல் தோல்வி, தியாக வாழ்க்கை என அனைத்தும் தெரிந்திருந்தும் அவளறியாமலே அவளது நடன நிகழ்ச்சிகளில் ஒரு பார்வையாளனாகப் பங்கேற்று மீராவைச் சந்திக்காமலே விலகி நிற்கிறான். அவனது கண்ணியம், உண்மைக் காதல், பொறுமை, எண்ணத்தில் வலிமை இறுதியில் மீராவை மணமுடிக்கக் காரணங்களாகியுள்ளது.


             பாக்கியம், ஆனந்தரங்கம் நரேந்திரன் போன்ற பாத்திரங்கள் சிறு பாத்திரங்களாயினும் மறைமுகமாக ரகுநாதனின் ஆளுமைக்கு அடித்தளமாகின்றன. வேலைக்காரியின் மகனாக இருந்தாலும் வக்கீல் ஆனந்தரங்கமும், பாக்கியமும் ரகுநாதனை தன் மகன் போலவே நடத்துகிறார்கள். சம வயது தோழர்களாகப் பேதமின்றி ஒற்றுமையாக வளர்கிறார்கள். உயர் குடும்பத்து அன்னபூரணி காலக் கொடுமையால் வேலைக்காரியாகப் பணி செய்ய நேரிட்டாலும், இலட்சிய வேட்கையை மகனின் மனதிற்குள் விதைக்கிறாள். மகனுக்கு வேலை கிடைத்தவுடன் தனி வீடு பார்த்து குடி பெயர்கின்ற அன்னபூரணி இறுதிவரை தன்னை வாழவைத்த குடும்பத்தை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள். இவளின் இறப்பு ரகுநாதனின் இலட்சியக் கதவை மறுபுறம் திறந்து விடுகிறது.
            
           இந்துமதிக்கு நாவலில் முக்கிய இடம் என்றாலும் தந்தையின் பிடிவாதத்திற்கு மாற்றாகச் சிறு துரும்பையும் நகர்த்திவிட முடியாத நிலையில் எதிர்பாராத விபத்து அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தந்து விடுகிறது. அத்தை மகன் வெங்கடேசனை மணமுடிக்கும் நிலை வருமானால் உயிரை விடுவதே மேல் என்ற அவளுடைய எண்ணம் இயல்பாக நிறைவேறி அனைவருக்கும் நிம்மதியைத் தந்துவிட்டது.

            சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அனைவரையும் பம்பரம்போல் தன் அதிகார பணபலத்தால் ஆட்டிப் படைக்கும் அவள் தந்தை நீலகண்டம்பிள்ளை இந்துமதியின் காதலுக்கு விதித்த தடை அவர் நினைத்த மாதிரியே நடந்து விட்டது. அந்தஸ்து பித்துப்பிடித்த அவரின் மனதில் மரணம் பெரிய இடியை இறக்கி அவரையே ஆட்டி வைத்துவிட்டது. நீலகண்டம் பிள்ளை மனிதர்களைப் பகடைக் காயாக நகர்த்தும் ஆட்டத்தில் கை தேர்ந்தவர். வியாபாரத்தில் குறுகிய காலக் கட்டத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு அவர் வருவதற்கு மனிதர்களின் எண்ண வோட்டங்களை நுட்பமாக அறியும் நுண்ணுணர்வு காரணம் என்பதை இந்துமதியை விட்டு ரகுநாதனை நிரந்தரமாகப் பிரிக்க இரகுநாதனின் இலட்சிய வேட்கையையே சாட்டையாக அவர் பயன்படுத்துவதன் மூலம் நாவலாசிரியர் வெளிப்படுத்துகிறார். தரிசாகக் கிடக்கும் நிலமும் பண்பாடும், ரகுநாதனும் இந்துவை மறப்பான் என அவர் கணக்கு போடுகிறார். நகுநாதனுக்கு நிலம் பண்படுத்த அனுப்பும் தொகையை நிறுத்தி விடுகிறார். வெளிநாடு செல்ல ஆசை காட்டுகிறார். எனினும் மார்க்சிய கொள்கைப் பிடிப்புடைய அவர் மகன் ராஜு மறைமுகமாக உதவி செய்கிறான்.

         பாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம்முடன் வாழ்வதைப் போலவே படைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்களின் தோற்றங்கள் குறித்த வருணனைகளை விட அவர்களின் செயல்பாடுகளின் வழியிலான வருணனைகள், உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான வருணனைகள் அச்சு அசலாகப் பாத்திரங்களை வாசகர் மனதில் பதிய வைக்கின்றன.

         வெங்கடேசன் ஆத்மநான் போன்ற பாத்திரங்கள் பணத்தையும், பகட்டையும் மேலைநாட்டு வாழ்க்கைமுறையையும் நம்பி சீரழிவது தற்கால இளைஞர்களின் வாழ்க்கைப் போக்கை நினைவூட்டி வேதனையை ஏற்படுத்துகிறது. தாய்மாமன் தன் மகளைக் கொடுத்து தன் பரந்து விரிந்த சொத்திற்கும் வாரிசாகத் தன்னை நியமிப்பார் எனப் பகற்கனவு காணும் படித்த மேதாவி வெங்கடேசன், தன் தாய்க்கு இணையான வயதுடைய சந்திராதேவியிடம் தொடர்பு  கொள்வதும், ரகுநாதனைத்தான் இந்துமதி விரும்புகிறாள் எனத் தெரிந்தும் பணத்திற்காக அவளை மணமுடிக்கச் சம்மதிப்பதும், மேலை நாகரிகத்திலுள்ள பழக்கங்களைக் கடைபிடிப்பதுதான் பிடித்தவர்களுக்கு அழகு என்று நடந்து கொள்வதும், உடல் உழைப்பை கேவலமாகக் கருதுவதும் இந்தியா சென்று கொண்டிருக்கும் பாதையை ஓர் உருவமாக்கி உலவ விட்டுள்ளாரோ நாவலாசிரியர் என்று தோன்றுகிறது.

          ரகுநாதனின் உள்ளம் ஒரு இலட்சியவாதியின் உள்ளம் டால்ஸ்டாய் பண்ணையின் ஐநுhறு ஏக்கர் நிலத்தையும் பண்படுத்தி விவசாய நிலமாக மாற்ற வேண்டுமென்ற வேகத்தில் இந்துமதியைக் கூட அவன் மறந்து போனான். நிலம், மழை, உழைப்பு, பண்படுத்த பணம் என்ற நோக்கிலேயே அவன் மனம் யோகியைப் போல் சுழன்று கொண்டிருந்தது. வானம் பார்த்த பூமியில் எங்காவது ஜீவ ஊற்று இருக்கும் எனத் தேடியலைந்து இறுதியில் ஊற்றைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனுடைய ஜீவனான இந்துமதி அவனை நிரந்தரமாக விட்டுப் போய் விடுகிறாள். எல்லாம் மாயை என்று நிலை தடுமாறிப் போகிறான். தன்னை, நிலத்தை, ஊற்றை மறந்து போகிறான். ஆனால் பல மாதங்களின் கடின உழைப்பினால் கண்டறிந்து தோண்டப்பட்ட ஊற்று நீர் வீணாவதைக் கேட்டளவில் துக்கத்தை விடுத்து நிலத்தைக் காக்க ஓடுகிறான். அவனுடைய இலட்சிய வெறி அவனைப் புதிதாய் பிறக்க வைக்கிறது. ஒரு சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழ இயலாத வறண்ட பூமி பசிய வயல்களாக மாறிப் போகின்றன.

           மீரா, ராஜு, மனோரமா உதவியால் தொழிற்பள்ளிக்கூடம், மருத்துவமனை, விருந்தினர் மாளிகை எனப் பல கனவுகளை ரகுநாதன் நிறைவேற்றுகிறான். இன்னும் நிறைவேற்றப் போகும் தேச முன்னேற்றத்தை அடித்தளமாகக் கொண்ட நிலையங்கள் குறித்த செயல்திட்டங்களை ரகு தீட்டத் தொடங்கியிருந்தான் என்று நாவலாசிரியர் கூறும் பொழுது, இழப்புகள் கூட வலிமையைத் தரும் என்ற உண்மை ஒளி வீசி நிற்கிறது. சவ்வாது மலையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை இதைப்படிக்கும் வாசகர் பெறுவர் என்பது உறுதி. அங்குச் சென்றால் தின்னன் போன்றோரைப் பார்க்கலாம் என்று நாவலைவாசித்ததும் எண்ணம் எழுகின்றது. 
தமிழில் இலட்சியவாதமும் நடைமுறை வாழ்க்கையையும் எழுதப்பட்ட நாவல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் இது தலை சிறந்தது. 
பாத்திரங்களை உயிரோடு உலவவிடும் வித்தை ஆசிரியருக்கு கைவந்த கலையாக வரப்பெற்றுள்ளது. தமிழ் நாட்டு காண்டேகர் என்று இவரைக் கூறலாம். கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடமாக வைக்கக்கூடிய தகுதிவாய்ந்த நாவல் இது.
விமரிசனம்-முனைவர். திருமதி.ஜவாஹர் பிரேமலதா
   இணைப்பேராசிரியர்.(தமிழ்த்துறை)
  அரசு அறிவியல் கலைக்கல்லூரி, சேலம்-7(தன்னாட்சி)
           [தொலைபேசி:9488417411]