டாக்டர். வி. ஆனந்த மூர்த்தி
M.A. (Tamil), M.A. (His.) M.A. ((Pol. Sc), M.A.(Eco), M.A. (Pub. Admn), M.A.(Soc.), M.A. (Joul.), M.A. (Phil.), M.A. (Pop.Edun.), M.A. (Gandhian), M.Com., M.Com., (Banking), M.Com., (Insurance). M.Ed., M.Lib.Sc.,Dip. in Telugu& Ph.D
இணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாநிலக் கருவூல மையம், சென்னை-20.
![]() |
அணுசக்தியே இனி ஆதார சக்தி |
அணுசக்தியே இனி ஆதார சக்தி என்ற அற்புதமான நூலை வாசிக்க ஒரு வாய்ப்புக்கிடைத்தது. பக்கத்திற்குப் பக்கம் வாசித்துக் கொண்டே செல்லும்போது திரு.சி. ஜெயபாரதன் அவர்கள் எத்தனை அற்புதமான அறிவியல் எழுத்தாளர் என்பது புலப்பட்டது. இதைக் குறித்து என் கருத்துக்களோடு அவருடன் 1957 முதல் 1957 ல்அணு சக்தித்துறையில் சி.ஜெயபாரதன் அவர்களுடன் இந்திய அணு உலைகளில் பணியாற்றிய [ஹோமி பாபா அவர்களுடன் தொடர்புள்ள ] திரு.கி.வ. வண்ணன் அவர்கள் எழுதியுள்ளதை இணைத்துப் பார்க்கிறேன் .
திரு.கி.வ. வண்ணன் அவர்கள் கூறுவது
திரு.கி.வ. வண்ணன் அவர்கள் கூறுவது
"அண்டவெளி, மற்றும் புவியிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்களுக்கு வழியில்லை. ஆனால் பயப்படவே ண்டியதில்லை. எடுத்துக்காட்டாக கேரள கடற்கரை மருத்துவ சோ தனையின் போ தும் இத்தாக்கத்தை கவனமாகக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இந்த தாக்கம் உடல் ஊனம் ஏற்படுத்த வல்லது. ச ந்ததியையும் தாக்க வல்லது. இதன் காரணமாக ஏராளமான கட்டுப்பாடுகளை அணுமின் நிலையங்களில் விதிக்க வே ண்டியுள்ளது. இருந்தாலும் இன்னும் சு மார் 30 ஆண்டுகளுக்கு, சுற்றுச்சூ ழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதே நே ரம் மின்ச க்தி தே வையையும் பூர்த்தி செய் யும் நோ க்கில், அணுமின் நிலையங்களைத் தவிர்க்க இயலாது. இக்கருத்தை பில்கேட்ஸும் ஆதரிக்கிறார். இந்த பின்னணியில் , உலகில் மற்ற எந்த நாட்டையும் விட, நம்மை ஒத்த மக்கள் தொகை, பொருளாதார நிலை உடைய சீனாவுடன் தான் நம்மை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளவே ண்டும். சீனா அணுமின் உற்பத்தியைப் பெரிய அளவில் செய் கிறது என்பது கவனிக்கத்தக்கது.
நண்பர் திரு. சி.ஜெயபாரதன் அவர்கள் அறிவியலுக்கும், தமிழுக்கும் அரும்பணியாற்றி வருகிறார்.
திரு.பெ.நா.அப்புசாமி, திரு.சுஜாதாவிற்கும் பிறகு இவர் அளவிற்கு யாரும் தமிழில் அறிவியல் கருத்துக்களைப் பரப்பியதாகத் தெரியவில்லை. அவர்களே கூட இவ்வளவு அரிய செய்திகளை இவ்வளவு எளிதாக,அற்புத மாக விளக்க வில்லை.
அறிவியல், பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி அறிவியலில் ஆர்வம் கொண்ட அனைத்துப் பிரிவினருக்கும் எளிதில் புரியும்படி இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார். நூலில் கண்டுள்ள புள்ளி விபரங்கள் மலைக்க வைக்கின்றன. புகைப்படங்கள் தத்ரூபமாக உள்ளன. தமிழ் மொழிக்கே இது மகத்தான நன்கொடை.அவருடைய பணி தொடர வாழ்த்துகிறேன்.இந்த நூலை வெளியிட்டுள்ள தாரிணி பதிப்பகத்தாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Jyothirllata Girija says:
ReplyDeleteJune 15, 2016 at 5:42 am
அன்புமிக்க ஜெயபாரதன்
உங்கள் நூலை வையவன் அவர்கள் அனுப்பினார்கள். அருமையான அமைப்பு. அணு ஆற்றல் பற்றி உங்களின் அளவுக்கும், தரத்துக்கும் தமிழில் எவருமே எழுதியதில்லை. பாராட்டுகள். இந்தியாவில் விஞ்ஞான நூல்களுக்குப் பரிசு தருகிறார்கள். அதற்கு அனுப்பச் சொல்லுங்கள். எனக்கு விவரம் தெரியாது. தெரிந்தால் நானே சொல்லுவேன். எழுத்தாளர் அமரர் சுஜாதாவுக்குக் கொடுத்தார்கள்.
அன்புடன்,
ஜோதிர்லதா கிரிஜா