Monday, 6 June 2016

அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99

                                  அல்லாஹ்வின் திருப்பெயர்கள்  99 


Kazi.Mufti.Dr.Salahuddheen Mohammed Ayyub.
Govt.Chief Hazi, Royappettah 

Chennai-14(Mobile:9840336304)


அன்பும் அருளும் உள்ள இறைவனது திருநாமத்தால் துவங்குகிறேன். அந்த  இறைவன் உலகங்களுக்கு அருட் கொடையாக அனுப்பித் தந்த அவனது திருத்தூதர் நபிகள் நாயத்தின் அவர்களின் ஆசியும் அருளும் இந்த நூலை வாசிப்பவர்கள் மீது பொழிவதாக!
அவநம்பிக்கையும் துன்பங்களும் போர்வெறியும் மிகுந்து வரும் இந்தக் காலகட்டத்தில் அவற்றிற்கு மாமருந்தாக விளங்குவது அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மட்டுமே 
அவற்றில் மிகவும் ஆற்றலுள்ளதாக  விளங்கும் 99 பெயர்களுக்கும் ஒவ்வொன்றுக்குமான விசேஷ ஆற்றல்கள் உண்டு. தம்சொந்த  வாழ்வில் நபிமார்கள் (ஸல்)நூஹா,(ஸல்)மூசா ,(ஸல்) ஹாரூன் , (ஸல்)யூனுஸ், (ஸல்)தாவீது(ஸல்) ஜக்கிரியா  ஆகியோர்  இடைவிடாது உச்ச ரித்து அவற்றால்  அற்புதமான பலன்களைக்கண்டு மக்களுக்கு விளக்கியிருக்கிறார்கள்.
அந்தப் பெயர்கள்  ஒவ்வொன்றையும்  எவ்விதம்  உச்சரிப்பது,எத்தனை முறை கூறுவது ,எந்தெந்தசந்தர்ப்பங்களில் உச்சரித்து இறைவனது அருளை 
வேண்டுவது என்று தனி விதிமுறைகளும் விளக்கங்களும் உள்ளன.
அவை ஒவ்வொன்றையும் தம் சொந்த வாழ்வில் அனுச ரித்து இடைவிடாது கடைப்பிடித்து வரும்  இஸ்லாமிய சகோதரி பேராசிரியை டாக்டர். திருமதி நஸீம் அக்தர் அவர்கள் இந்த நூலில் அல்லாஹ்வின் திருப்பெயர்களை அரபி, ஆங்கிலம் ,தமிழ் ஆகிய மும்மொழிகளிலும்  தந்து இனிய எளிய தமிழில் மிக உருக்கமான விதத்தில் விளக்கியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் திருநாமம் சொல்லி துவா(பிரார்த்தனை) செய் து தாம் பெற்ற பலன்களையும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். அவர்  செய்துள்ள தொண்டு இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமின்றி நம்பிக்கையைத் தம் உயிர் நாடியாகக்கொண்டு வாழும் அனைவருக்கும் உரியது. அந்தப் பணி செய்த  சகோதரிக்கு, அல்லாஹ்வின்  கருணையும் ஆசியும் அவருக்குக் கிட்டவே ண்டும் என்று வாழ்த்தி துவா செய்துகொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------
                                                                               
இதிலுள்ள பெயர்களும், அதை உச்சரிப்பதால் இந்த  கிடைக்கும் கிருபைகளும் ஒருக்காலும் பொய்யாகாது. நான் அல்லாஹ்வைப் பற்றிக் கடுகளவு கூட  அறியாதவள். எனினும் அவனது திருப்பெயர்களை  எப்பொழுதும் தெரிந்தும் தெரியாமலும் உச்சரித்துக் கொண்@ட தான் இருப்பேன். இந்த புத்தகத்தில் கூறப்பட்ட திருநாமங்களையும் வசனங்களையும், சுராக்களையும் உரிய முறையில் உச்சரித்து நான்  பலன் பெற்றுள்ளேன். அவர் பெயரைச் சொல்வதினால் ஏற்படும் பலனை எல்லோரும் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் அவர் பெயர் சொல்லி  துவா செய்கிறேன். 
நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'முஸ்லீம் பெண்களும், அவர்களுடைய கல்வியும்’ என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்த பொழுது, ஆராய்ச்சியை தொடங்குவதற்குள் பல தடைகளை எதிர்கொண்டே ன். அல்லாஹ்வின் திருப்பெயரில் உள்ள மகிமையை ஓது என்ற உந்துதல் எனக்குள் தோன்றியது. அல்லாஹ்வின் திருப்பெயர்கள் அடங்கிய சுரா (இக்கலாஸ்) குல்ஹு வல்லாஹு அஹத் என்று தொடங்கி அஹத் என்று முடியும் சுராவை ஓதிக் கொண்டே 27ம் எண் பஸ்ஸில் சென்னை அண்ணா நகரிலிருந்து புறப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகம் செல்வேன். அது சென்றடைய ஒரு மணி நேரம் பிடிக்கும். 
அந்த நேரத்தில் அந்த இறைவனின் திருநாமம் அடங்கியசு ராவை ஓதுவேன். அதன் பலன் என் ஆராய்ச்சி மூன்று வருடங்களில் முடிந்தது. அங்கேயே பணியிலும் சேர்ந்தேன். அதே போல் என்னுடைய அண்ணார் சிறுநீரக நோயாளி. அவரைப் பார்க்கப் போகும் பொழுதெல்லாம் ‹ரா பாத்திஹாவையும், மற்ற பெயர்களான யா ஷாபி யாகாபி என்று சொல்லி அவர் மேல் ஓதி வருவேன். அவரை டாக்டர்கள் கைவிட்ட நிலையிலும் இதை ஓதி, ஓதி வருவேன். அல்லாஹ்வின் மகிமையே மகிமை, அவர் விரைவில் எழுந்து அமர்ந்தார்.அவர் அமர்ந்தது ஒரு பெரிய வியப்பே. அவர் நலன் பெற்று இருப்பது புதுமையிலும் புதுமை. இப்பொழுதும் அல்லாஹ்வின் குணமளிக்கும் திருப்பெயர்களை சொல்லி அவர் மேல் ஓதி வருவேன்.
எவர் ஒருவர் பயபக்தியுடனும், நம்பிக்கையுடனும் இந்தப்பெயர்களை யார் உச்சரிக்கிறாரோ  அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதற்கு ஐயமே இல்லை
-டாக்டர். திருமதி நஸீம் அக்தர்
வெளியீடு: தாரிணி பதிப்பகம் சென்னை-20 மொபைல் :9940120341

No comments:

Post a Comment