Saturday, 4 June 2016

அணுசக்தி பிரச்சினைகளும் மெய்ப்பாடுகளும்


                                                                       

நான் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசிப்பவன். எனது தந்தையார் வி.எஸ். வீரபத்திர முதலியார் 5 முறை திருப்பத்தூர் நகராட்சித் தலைவராக இருந்தவர். திருப்பத்தூரில் முக்கியமான தி.மு.க.பிரமுகராக இருந்தவர். பெரியார், பேரறிஞர் அண்ணா, இலக்கிய மாமேதை ஜெயகாந்தன் ஆகியோர் எங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருவார்கள்.அவரது கடைசி மகனான எனக்கு 72 வயதாகிறது. நான் நூற்றுக்கணக்கான அறிவியல் நூல்களை இதுவரை வாசித்திருக்கிறேன். ஆனால் திரு. சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதிய அணுசக்தி பிரச்சினைகளும் மெய்ப்பாடுகளும்  இந்த நூலைப் போல் ஒன்றை நான் வாசித்ததில்லை. தமிழுக்கு அவர் செய்திருக்கும் தொண்டு மாபெரும் தொண்டு. எங்கோ கனடாவில் முதிர்ந்த வயதில் எவ்விதப் பயனையும் எதிர்பாராது அவர் எழுதியுள்ள இந்த நூல் அவருக்கு அழியாப்புகழைத் தரும். வாழ்க அவர் தொண்டு.வளர்க அவரது தமிழ்ப்பணி
                                                   
மிக்க அன்புடன்  
V.S.V.Dhandapani,
175, Asiriyar Nagar
Tiruppattur
635601
Mobile:9842704320

No comments:

Post a Comment