மேஜர் ஜெனரல் எம்.வி. ஆனந்தகிருஷ்ணன் .ஏ.வி.எஸ்.எம். |
கோடியில் ஒருவருக்கே கிடைக்கும் வாய் ப்பு
நாட்டுப்பற்றின் மீது கொண்ட மதிப்பின் விளைவாக இராணுவத்தில் சேர்ந்து தம் பணியை உண்மையான விசு வாசம் மற்றும் அர்ப்பண உணர்வுடன் நிறைவே ற்றி வரும் பல்லாயிரம் இராணுவ வீரர்களில் கர்னல் கணே
சன் மாறுபட்டவர். அவரது நல்வினை அவரை இரு இந்தியப்போ ர்களில் கலந்து நிறைந்த அனுபவத்தைப் பெறச்செய் திருக்கிறது.
@மலும் அவர் சே வைக்கு அணி சே ர்ப்பது போ ன்று அமைந்தது அவர் அண்டார்க்டிகாவில் தக்ஷிண் கங்கோத்ரி பனி ஆய் வுக்கூடத்தின் தலைவராகப் பொறுப்பே ற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றியது கோ டியில் ஒருவருக்கே கிடைக்கும் வாய் ப்பு.
பாரத நாடு பெருமை கொள்ளவேண்டிய பல அரிய ஆற்றல்கள் பெற்ற இந்த இராணுவ அதிகாரியின் பால் நான் கொண்டுள்ள மதிப்பு தனி வகையானது.
இராணுவசேவையும் சமூகமும்
மே ஜர் ஜெனரல் ஜே .ஜே .மணவாளன் .ஏ.வி.எஸ்.எம்.
நான் கர்னல் திரு.பா.கணேசன் அவர்களின் தலைமையின் கீழ் இராணுவத்தில் பணியாற்றியவன். அவரது சீரிய சே வை உணர்வு தன் கீழ் பணியாற்றும் அதிகாரியாயினும் எளிய சிப்பாய் ஆயினும் அவர் காட்டிய நிலை மாறாத மரியாதை , அணுகுமுறைஆகியனவற்றை நே ரடியாகக் கண்டவன். அதனால் பயன் பெற்றவன். ஒரு வகையில் அவர் எனது வழிகாட்டி. இராணுவப் பணி என்பது மற்ற அரசாங்க உத்தியோகம் போல் தான் என்று மிக சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவப் பணி என்பது சே வையே . அப்படி சே வை புரியத் தேர்வாகி, அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு படைப் பிரிவில் சேர்ந்த பிறகு உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியம். கூட@வ பணி சார்ந்த வேலைகளில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் இராணுவத்தினர்களின் கடமையாகிறது. ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவு தலைவனோ சொல்லித்தான் தனது உடல் நலத்தையோ அல்லது பணித்திறமையையோ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
“எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற இவரது முதல் நூல் இராணுவ அதிகாரியான கர்னல் பாவாடை கணேசனது ஆரம்பகால இராணுவ வாழ்கை பற்றியது. பெற்றோர்களுடன் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று பெரிய குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து வளர்ந்த கணேசன் யாருமே எதிர்பாராமல், முன்னர் எக்காலத்திலும் அறிமுகமில்லாத விதத்தில் இராணுவ அதிகாரியானார். ஆரம்பகால இராணுவ வாழ்க்கையில் குடும்பத்துடனான பாசப்பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விடுபடவும் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட இராணுவ வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ள்ளவும் வைத்த காலமது. அந்த முதற்பகுதி 30 கடிதங்களடங்கியது. இராணுவ அதிகாரியாகத் தேர்வானது முதல் 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தானிய போர் அதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி “பங்களாதேஷ்” என்ற தனி நாடாகியது என்பதுடன் முடிகிறது.
இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.
இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மே லும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை வே ண்டி வாழ்த்துகிறே ன்.
நூலில் சில வரிகள்
அவர் ஒரு இராணுவ அதிகாரி! ஆரம்ப காலத்தில் ‘"Officers are born with silver spoon''” என்ற பெருமையான உதாரணத்திற்கு விளக்கமான பயிற்சியும் வாழ்க்கை முறையும் கொண்டிருப்பதைக் கண்டவர். கணேசன் தனது உற்றார் பெற்றோர் அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் கலங்கினார். ரயில் வண்டி ஓடிக் கொண்டிருக்க மிகவும் புண்பட்ட இதயத்துடன் தான் விளையாடித் திரிந்த வயல் வெளிகள் பின்னோக்கி ஓடுவது கண்டு மிகவும் கண் கலங்கினார். சிறு வயதில் ஒருமுறை அவரது தம்பிக்கு காலில் முள் தைத்து புரையோடி விட்டது. கிராமப்புற மருத்துவன் வந்து வைத்தியம் பார்த்தான். கால் பாதத்தில் மெல்லிய கம்பியை விட்டு மேல்புறமாக இழுத்தான். தம்பி வலியால் துடித்த பொழுது கணேசனை தம்பி மேல் உட்கார்ந்து அவர் அசையாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இரத்தமும் கீழுமாக வெளியேற தம்பி மிகவும் துடித்தார். பின்னர் பச்சிலை வைத்துக் கட்டினார்கள். 15-20 நாட்களில் குணமாகி விட்டது.
இன்று கணேசனின் மனதிலிருந்தும் அப்படித்தான் இரத்தமும் சீழும் வெளியேறுகிறது. “காலம் என்ற வைத்தியன் கட்டும் பச்சிலையினால் அந்தப்புண் குணமாக வேண்டும். இந்த ஊரும் மனிதர்களும் மீண்டும் ஒருமுறை அவர் இங்கு வரநேர்ந்தால் ஒரு சமயம் அவரை வரவேற்கலாம். மனதில் அலை அலையாக எழும் உணர்வுகளை வெளியில் யாருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த துக்கமும் துயரமும் தனது மனதில் தவறான அணுகுமுறையால் உருவானவை என்பதை கணேசன் ஆணித்தரமாக உணர்ந்தார். இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே என்று தானே உருவாக்கிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தார். இல்லை! இழப்பதற்கு இன்னும் ஏராளமானவை அவரிடம் இருக்கிறது. 30 வயதே ஆன அவரின் எஞ்சிய வாழ்க்கை இமயம் போல் எழுந்து நிற்கும். அவர் ஏன் அதை இழக்க வழிதேட வேண்டும்? உடலாலும் மனதாலும் உறுதியானவராக அவர் ஆகவேண்டுமானால் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் கொள்ள வேண்டும்......
பதிப்பாளர் முகவரி.
Dharini Padhippagam,
32/79 Gandhi Nagar 4th Main Road
Adyar, CHENNAI-600020
PH.24400135
Mobile:9940120341
No comments:
Post a Comment